நிதி திரட்டுவது எப்படி?

By சொக்கலிங்கம் பழனியப்பன்

தொழில் செய்ய விரும்பும் முதல் தலைமுறையினர் எடுத்தவுடன் கேட்பது பணம்தான். அப்பா வசதியானவராக இருந்தால் அவரிடம் உடனே தனது தொழில் பற்றிய ஐடியாவைக் கூறி பணம் கேட்கின்றனர். அப்பா பெரும் பணக்காரராக இருந்தால் அவரும் கேட்ட தொகையை உடனடியாக கொடுத்துவிடலாம். ஆனால், பல்லாயிரக்கணக்கான பெற்றோர்கள் நடுத்தரவர்க் கத்தில்தான் இருக்கின்றனர். அவர்கள் குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, கல்லூரிகளில் படிக்க வைத்து தன் மகனோ அல்லது மகளோ சொந்த காலில் நின்று கொள்ளுவார் என்று பெருமை கொள்ளும் சமயத்தில், பெற் றோர்களைச் சார்ந்து குழந்தைகள் தங்கள் எதிர்காலத்தை அமைப்பது உகந்ததல்ல. மேலும் பெற்றோர்களே இன்றைய நிதி நெருக்கடியில் தங்களது ஓய்வு கால நிதித்தேவைகளுக்கு எவ் வாறு வழிவகை செய்வோம் என்று குழம்பியிருக்கும் நேரத்தில், இதுபோல் ஒரு வெடிகுண்டை குழந்தைகள் போடுவது முறையானதும் அல்ல.

பெற்றோர்களை விட்டால் குழந்தைகள் அடுத்து நாடுவது தங்களது மிக நெருங்கிய உற வினர்களை அல்லது நண்பர் களைத்தான். அவர்களின் நிதி நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று கூட நிதி கேட்பவருக்குத் தெரியாது. இவர்கள் இருசாரரிட மும் பணம் கிடைக்கவில்லை என்றவுடன் தொழில் முனைவோர் வருத்தப்பட ஆரம்பித்து விடுவர்.

எதற்குமே சரியான அணுகு முறை என்று ஒன்று உள்ளது. பணம் இருக்கும்/ இல்லாத பெற் றோரிடமோ அல்லது உறவினரி டமோ அல்லது நண்பரிடமோ உடனடியாகப் பணம் கேட்டு அவர்களையும் தர்ம சங்கடத்திற்கு உண்டாக்கி நம்மையும் தர்ம சங்கடத்தில் உள்ளாக்கிக் கொள்வது என்பது தவறு.

பொதுவாகக் கல்லூரி முடித்த வுடன் தொழில் செய்ய விரும்பு பவர்கள், தங்களது தொழிலுக்குத் தேவையான அளவு, சிறிய மூலதனத்தை வேலையில் சேர்ந்து சம்பாதித்து சேர்ப்பதுதான் சரி யான முறையாகும். எனது ஐடியா மிகவும் சூப்பர்; பல கோடி ரூபாய் சம்பாதிக்க வாய்ப்புள்ளது; ஆகவே தொழில் ஆரம்பிக்க என்னால் சிறிது காலம்கூட காத் திருக்க முடியாது என நினைப் பவர்கள், ஸீட் கேபிட்டல் மற்றும் வெஞ்சர் கேபிட்டல் (Seed Capital & Venture Capital) நிறுவனங்களை அணுகி தங்களது ஐடியாவை செயல் வடிவத்திற்குக் கொண்டு வருவதற்கு பணம் கேட்கலாம்.

முதல் முறையாக தொழில் துவங்க நினைப்பவர்கள் முதலில் தங்களது ஐடியாவை ஒரு ரிப் போர்ட் வடிவத்தில் கொண்டு வரவேண்டும். அந்த ரிப்போர்ட்டில் தாங்கள் செய்யப்போகும் தொழில் பற்றிய விபரங்கள், அத்தொழிலுக்கு இருக்கும் வாய்ப்புகள் மற்றும் சந்தை, அத்தொழிலின் சிறப்பம்சங்கள், அத்தொழிலை தான் செய்வதால் என்ன சிறப்பு, அத்தொழிலிலிருந்து எதிர்பார்க்கும் லாபங்கள், அடுத்த 3 அல்லது 5 வருடத்தில் ஆரம்பிக்கப்போகும் தொழில் எந்நிலையில் இருக்கும் போன்ற விவரங்கள் அனைத்தையும் ஓரிரு பக்கங்களுக்குள் விவரியுங்கள். இதை குறுகிய பிராஜக்ட் ரிப் போர்ட் (Project Report) என்றும் கூறலாம். முதலில் இந்த குறுகிய ரிப்போர்ட்டை உங்களுக்கு நெருக்கமாக இருக்கும் அதே சமயத்தில், முதலீடு செய்யத் திறனுள்ள நண்பர்கள் உறவினர் களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களின் அபிப்ராயம்/ கருத்து களைப் பொருத்து மற்றவர்களிடம் நீங்கள் பேசலாம். உங்களின் முதல் முயற்சி அவ்வளவு வெற்றி கரமாக இருக்காது. சிலசமயங் களில் உங்களை நம்பி யாரும் பணம் போடக்கூட முன் வரமாட் டார்கள். அதற்காகக் கவலைப் படாதீர்கள். உங்களிடம் திறமை யும் ஐடியாவும் இருக்கும் பொழுது அதை உங்களால் முடிந்த சிறிய முதலீட்டுடன் வெளிக்கொண்டுவரப் பாருங்கள். உங்கள் திறமை ஓரளவு தெரிந்து விட்டால், மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை ஏற்படும். அதன் பிறகு அவர்களும் பணம் தர முன் வருவார்கள். நிதி திரட்டுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இன்றைய உலகத்தில் சிறிய முதலீட்டில் பல தொழில்களை நீங்கள் தொடங்கலாம். உங்களது திறன் வெளிப்பட வெளிப்பட பலரும் உங்களுடன் சேர்ந்து தொழில் செய்ய முன் வருவார்கள்.

இன்று தொழில் செய்ய விரும் பும் பலரும் எடுத்த எடுப்பிலேயே எங்களுக்கு வெஞ்சர் கேபிட்டல் கிடைக்குமா அல்லது பிரை வேட் ஈக்விட்டி (Private Equity) கிடைக்குமா என்று கேட்கிறார்கள். இவையெல்லாம் இன்றைய இந்தியாவில் சகஜமாக கிடைக் கிறது; என்றாலும் நீங்கள் நினைப் பது போல் அவ்வளவு சுலபமானது அல்ல. ஆரம்ப காலங்களில் நீங்கள்தான் வியர்வை சிந்த வேண்டும். ஓரளவு உங்களது ஐடியாவை நிரூபித்த பிறகு பலரும் உங்களுடன் சேர்ந்து பறக்கத் தயாராக இருப்பார்கள். அதுவரை தலைவரும் நீங்கள்தான்; வீரரும் நீங்கள்தான் என ஒரு மனித ராணுவமாகச் செயல்பட வேண்டும்.

உங்கள் தொழில் சிறிதளவேணும் வளர்ந்த பிறகு, உங்களது தொழில் வளர்ச்சிக்காக வங்கிகள் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களை நீங்கள் நாடலாம். வங்கிசாரா நிதி நிறுவனங்களில் வட்டி சற்று அதிகமாக இருக்கும். அதே சமயத்தில் பிராஸஸிங்கும் சற்று விரைவாக இருக்கும். வங்கிகளிடம் வட்டிகள் குறைவாக இருக்கும் ஆனால் அவர்கள் கடன் தருவதற்கு சற்று தாமதமாகும். ஆரம்பகாலங்களில், உங்களின் சொந்தபந்தம், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உங்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ளவர்களின் பணத்துடன் ஆரம்பித்து, பிறகு சற்று கடன் வாங்கி தொழிலை உயர்த்தி, அதன் பிறகு நீங்கள் வெஞ்சர் கேபிட்டல், பிரைவேட் ஈக்விட்டி போன்ற நிறுவனங்களிடம் நிதி கேட்டு செல்லும் பொழுது உங்களைச் சற்று உயர்த்திப்பார்ப்பார்கள். அவர்கள் பணம் தரவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதுசமயம் நீங்கள் உங்கள் தொழிலை இன்னும் விரிவு படுத்தலாம்.

சொக்கலிங்கம் பழனியப்பன்- prakala@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

மேலும்