7.5% வளர்ச்சியை இந்தியா எட்டும்: தரச்சான்று நிறுவனம் மூடி’ஸ் கணிப்பு

By ஐஏஎன்எஸ்

இந்தியாவின் வளர்ச்சி குறித்து கடந்த வாரம் சாதகமான கருத்துகளைத் தெரிவித்த தரச்சான்று நிறுவனமான மூடி’ஸ், இப்போது நடப்பாண்டில் இந்தியா 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என உறுதிபட தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது சுழற்சி அடிப்படையில் மேல்நோக்கி நகர்வதாக அமைந்துள்ளது. வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. உள்நாட்டில் பொருள்களின் தேவை அதிகரித்து வருகிறது என்று மூடி’ஸ் நிறுவன பொருளாதார நிபுணர் பராஸ் சையீத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பணவீக்கம் குறைந்து வருவதால் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை அரை சதவீதம் குறைப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. இந்த நடவடிக்கை தனியார் துறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

வட்டிக் குறைப்பு, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கை ஆகியன உள்நாட்டு வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதன் மூலம் தொழில்துறை வளரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை ஜனவரி 15 மற்றும் மார்ச் 4-ம் தேதிகளில் தலா கால் சதவீதம் குறைத்ததையும் இந்நிறுவனம் சுட்டிக் காட்டி யுள்ளது. இருப்பினும் நடப்பு நிதி ஆண்டில் 7-ம் தேதி நடைபெற்ற கடன் நிதிக் கொள்கையில் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் வட்டிக்கான கடன் அளவைக் குறைக்கவில்லை. இருப்பினும் பொருள்களின் விலை கட்டுக் குள் இருந்து, விலை குறையும் போதுதான் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை எடுக்கப்போவதாக ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கெனவே ஆர்பிஐ மேற்கொண்ட வட்டிக் குறைப்பின் பலன் நுகர்வோரைச் சென்றடையும் வகையில் வங்கிகள் வட்டியைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதையடுத்தே பெரும்பாலான வங்கிகள் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை எடுத்தன.

நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீத அளவுக்கு இருக்கும் எனவும், பருவமழை சாதகமாக இருக்கும் பட்சத்தில் இந்த வளர்ச்சி விகிதம் மேலும் உயர வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இப்போது 5.8 சதவீதமாக உள்ள பணவீக்கம் இந்த ஆண்டு இறுதியில் 4 சதவீதமாகக் குறையும் எனவும் ரகுராம் ராஜன் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டு அடிப்படையில் கணக்கிடும்போது முதல் காலாண்டில் 7.3 சதவீதமாக இருக்கும் என்றும் சையத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கடனை திருப்பி செலுத்தும் திறன் மற்றும் நிதி நிலை குறித்து மூடி’ஸ் திருப்தி தெரிவித்துள்ளதோடு ஸ்திரமான வளர்ச்சி இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. இதேபோல மற்றொரு தரச்சான்று நிறுவனமான ஃபிட்ச் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து திருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்