இணையதள தேடுபொறி நிறுவன மான கூகுள் விதிகளை மீறி செயல்படுவதாக ஐரோப்பிய யூனியன் குற்றம் சாட்டியுள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் கூகுள் நிறுவனத் தின் இயங்குதளமான ஆண்ட்ராய்டு சேவையை பயன் படுத்துமாறு நிர்பந்திப்பதாக போட்டி நிறுவனங்கள் தெரிவித் துள்ளன.
இதன்மூலம் இணைய தள தேடுதலில் இந்நிறுவனம் முன்னிலை வகிக்க உதவுவதாக போட்டி நிறுவனங்கள் புகார் செய்துள்ளதாக ஐரோப்பிய யூனியனில் நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கும் அமைப்பின் தலைவர் மார்கரெட் வெஸ்டாகெர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேற்கொள் ளப்படும் விசாரணையில் போட்டி நிறுவனங்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் கூகுள் நிறுவனம் சட்ட ரீதியான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். அத்துடன் ஐரோப்பிய யூனியனில் அதன் செயல்பாடுகளில் மிகப் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கூகுள் நிறுவனம் அதன் போட்டி நிறுவனங்களுக்கு வரும் இணை யத்தேடல்களை வழிமாற்றி கூகுள் தயாரிப்புகளுக்கு அனுப் புவதாகவும், குறிப்பாக இணைய தள ஷாப்பிங்கில் இத்தகைய உத்தியை கூகுள் கையாளுவ தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகார்களை அடுத்து ஐரோப்பிய யூனியன் கமிஷன் ஆரம்ப கட்ட புகார்களை பதிவு செய்து இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
வரைபடம் மற்றும் சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ள பல ஆன்லைன் நிறுவனங்கள் இது தொடர்பாக புகார் செய்துள் ளன.
செல்போன் தயாரிப்பாளர்கள் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை ஒப்புக் கொண்டுதான் தங்களது செல்போன்களில் வைக்கிறார் களா என்பது குறித்து தனியான விசாரணைக்கு உத்தரவிடப்பட் டுள்ளது.
ஆண்ட்ராய்ட் இயங்கு தளம் அமைப்பதால் கூகுள் நிறு வனத்தின் யூ டியூப் மற்றும் கூகுள் நிறுவன தயாரிப்புகள் முக்கியமான இடத்தில் செல் போன்களில் இடம்பெறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago