அடுத்த ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும்: நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதி

By ஐஏஎன்எஸ்

இந்தியா முழுமைக்கும் ஒருமுகமான வரிவிதிப்பு முறையாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அடுத்த நிதி ஆண்டில் நிச்சயம் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

டெல்லியில் நேற்று மாநில நிதி அமைச்சர்களுடன் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் தலைவரும் கேரள மாநில நிதி அமைச்சருமான கே.எம்.மணி உள்ளிட்ட அனைத்து மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, அடுத்த நிதி ஆண்டின் முதல் நாளான ஏப்ரல் 1-ம் தேதி (2016) ஜிஎஸ்டி அமலாகும் என நம்புவதாகக் கூறினார்.

இத்தகைய வரிவிதிப்பை நாடு முழுவதும் அமல்படுத்துவதில் தகவல் தொழில்நுட்பமும் பின்புலமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான மாநிலங்கள் இந்த வரி விதிப்பு முறைக்கு ஆதரவு தெரிவித்தன. இந்த வரி விதிப்பால் கிடைக்கும் பலன்களை அவை உணர்ந்துள்ளன. இதன் மூலம் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவு வலுப்பெறும். இதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஒருமித்து செயல்பட இது வழிவகுக்கும் என்று ஜேட்லி குறிப்பிட்டார்.

மாநில நிதி அமைச்சர்களின் அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் முதலாவது கூட்டம் இதுவாகும். இந்தக் குழுவுக்கு தலைவராக கேரள மாநில நிதி அமைச்சர் கே.எம். மணி உள்ளார். மத்திய அரசு திட்டமிட்டுள்ள ஜிஎஸ்டி அமலாக்கம் செயல்பட நீண்ட பணிகள் காத்திருக்கின்றன என்று கூட்டத்தில் பேசிய மணி குறிப்பிட்டார். ஒருமுக வரிவிதிப்பு என்பதை செயல்படுத்த அதிக காலம் பிடிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

இத்தகைய வரி விதிப்புமுறை மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பயனளிக்கக் கூடியது. பரஸ்பரம் பலனடையும் வகையில் இது ஏற்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இதை அரசியல் சாசனமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு மூன்று சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கான பணிகளை அதிகாரமளிக்கப்பட்ட குழு மேற்கொண்டு வருவதாக மணி குறிப்பிட்டார்.

துணைக் குழுவின் கருத்து களும் கேட்டறியப்பட்டு சேர்க்கப் படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மசோதா ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டு நாடாளுமன்ற ஒப்புதலுக்கு அனுப் பப்பட்டது. இது சட்டமாக நிறை வேற இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் அவசியமாகும். இந்த மசோதா நிறைவேற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கும் என நம்புவதாக ஜேட்லி குறிப்பிட்டார்.

மாநிலங்களின் ஒத்துழைப் பைப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டதாகவும், இதனால் மாநிலங்களுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றார்.

மத்திய விற்பனை வரி (சிஎஸ்டி) 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப் பீட்டை ஈடு செய்வதற்கு கடந்த மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி ரூ. 33 ஆயிரம் கோடி தொகையை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டி யிருக்கும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான மாநிலங்கள் பெட்ரோலியம், மதுபானம், புகை யிலை சார்ந்த பொருள்களுக்கு ஜிஎஸ்டி முறையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், இவற்றுக்கு மாநிலங்கள் வரி விதிக்க அனுமதிக்க வேண்டும் என கோரின. இதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும்போது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் பலவகையான மறைமுக வரிகள் ஒழியும். உற்பத்தி வரி, மதிப்பு கூட்டு வரி, விற்பனை வரி உள்ளிட்ட வரிகள் இனி இருக்காது. ஒரே விதமான வரி விதிப்பு முறை நாடு முழுவதும் இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

7 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்