`இப்போது முதலீடு செய்யாவிட்டால் வருத்தப்படுவீர்கள்’: சுந்தரம் மியூச்சுவல் பண்ட் நிர்வாக இயக்குநர் ஹர்ஷா விஜி பேட்டி

By வாசு கார்த்தி

பங்குச்சந்தை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த நிலையில் நேரடியாக முதலீடு செய்யத் தயங்குபவர்களுக்கு ஏற்ற இடம் மியூச்சுவல் பண்ட்கள் எனப்படும் பரஸ்பர நிதித் திட்டங்கள்தான். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சுந்தரம் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹர்ஷா விஜியை சந்தித்தோம்.

நிறுவனத்தின் செயல்பாடு, பங்குச்சந்தையின் ஏற்றம் உள்ளிட்ட பல விஷ யங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அவருடனான உரையாடலிலிருந்து...

சென்னை லயோலா கல்லூரி யில் படித்தவர். சார்டர்ட் அக் கவுண்ட் முடித்தவர். பிரைஸ்வாட் டர்ஹவுஸ் கூப்பர்ஸ், மெக்கென்ஸி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங் களில் இருந்தவர். கடந்த 10 வருடங்களாக சுந்தரம் பைனான்ஸ் குழுமத்தில் இருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக சுந்தரம் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.

நீங்கள் நிர்வாக இயக்குநராக பொறுப் பேற்ற பிறகு இருந்த சவால்கள் என்ன?

கடந்த சில வருடங்களுக்கு முன்பு எங்களது பண்ட்கள் நல்ல லாபம் கொடுத்து வந்தாலும், நான் பொறுப்பேற்ற போது, சில பண்ட் களின் வருமானம் எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால் டிஸ்ரி பியூட்டர்கள், முதலீட்டாளர்களின் நம்பிக்கை சரிந்தது. இவர்களின் நம்பிக் கையை அதிகரிப்பது மற்றும் நிறுவனத்தில் சில மாறுதல்களை செய்ய வேண்டி இருந்தது.

1996-ம் ஆண்டு முதல் சுந்தரம் மியூச்சுவல் பண்ட் ஆரம்பிக்கப்பட் டது. ஆனால் உங்களுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் தற் போது உங்களை விட அதிக நிதியை (ஏ.யூ.எம்.) கையாளுகிறார்கள். ஏன்?

எங்களுக்கு ஏ.யூ.எம். மட்டும் முக்கியமல்ல. இதில் முதல் இடத் தில் வர வேண்டும், இத்தனை சதவீத வளர்ச்சி இருக்க வேண்டும் என்ற எந்த திட்டமும் இல்லை. ஆனால் 1996-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ஒரு வருடம் கூட நாங்கள் நஷ்டமடைந்ததில்லை. எங்களை விட அதிக நிதியைக் கையாளுபவர்கள் நஷ்டம் அடைந்ததைப் பார்த்திருக்கிறோம்.

கடன் மற்றும் லிக்விட் பண்ட் களில் நாங்கள் பெரிதும் கவனம் செலுத்தவில்லை. எங்களது பலம் சிறுமுதலீட்டாளர்கள்தான்.

தென் இந்தியா நிறுவனம் என்பதால் வளர முடியவில்லையா?

தென் இந்தியா நிறுவனமாக இருந்துகொண்டு தென்னிந்தியா வில் இன்னும் கொஞ்சம் இந்த பகுதியில் வளர்ந்திருக்கலாம் என்று தான் நாங்கள் நினைக்கிறோம். தென் இந்திய நிறுவனம் என்ற சாதகத்தை நாங்கள் இன்னும் கூட பயன்படுத்தி இருக்கலாம். எங்களுடைய பிஸினஸில் பெரும் பகுதி மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் இருந்துதான் வருகிறது. வளர்ச்சிக்கும் தென் இந்திய நிறுவனம் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பி.என்.பி. பரிபா தங்களுடைய பங்கினை விலக்கிகொண்ட பிறகு வேறு எந்த நிறுவனத்துடனும் இணையவில்லையா?

இன்னொரு நிறுவனம் வந்தால் பணம் கிடைக்கும் என்பதற்காக கூட்டு சேர முடியாது. இந்திய நிறுவனமோ வெளிநாட்டு நிறுவனமோ அவர்களுடன் சேரும் போது கூடுதலாக ஒரு மதிப்போ அல்லது திறமையோ கிடைக்கும் போது சேரலாம். இப்படி எதாவது ஒரு நிறுவனம் வரும் போது இணைவதை பற்றி யோசிக்கலாம்.

கடந்த ஒரு வருடத்தில் cloesd ended fund-களை அதிகம் வெளியிட்டது சுந்தரம் மியூச்சுவல் பண்ட்தான். ஏன் இவ்வளவு பண்ட்களை வெளியிட வேண்டும்? என்ன காரணம்?

இதற்கு இரண்டு பதில் சொல்கிறேன். முதலில் நாங்கள் ஆரம்பித்தது மைக்ரோ கேப் சீரியஸ். இது ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்யும் பங்கு. இதில் முதலீட்டாளர்கள் வருவதும் போவதுமாக இருந்தால் பண்ட் மேனேஜரால் சரியாக நிர்வாகம் செய்ய முடியாது. அதனால் cloesd ended fund-ஆக மட்டுமே வெளியிட முடியும்.

ஒரு சீரிஸ் வெளியிடும் போது அனைத்து முதலீட்டாளர்களுக்கும் முதலீடு செய்ய வாய்ப்பு இருக்காது என்பதால் அடுத்தடுத்த சீரிஸ் வெளியிட்டோம்.

மேலும், முதலீட்டாளர்களில் நீண்ட காலம் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் ஒரிரு வருடங்களில் முதலீட்டை எடுத்துவிடுகிறார்கள். மூன்று/ஐந்து வருடங்களுக்கு பிறகு எடுக் கும் போது லாபம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். முதலீட்டாளர் களுக்கு நல்ல அனுபவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த வகை பண்ட்களை வெளியிட்டோம்.

ஐந்து வருடத்துக்கு பிறகு குறிப் பிட்ட அந்த நாளில் லாபம் கிடைக் கும் என்று சொல்ல முடியாதே?

நாங்கள் குறிப்பிட்ட நாளில் மொத்த பணத்தையும் எடுக்க மாட்டோம். குறிப்பிட்ட காலத்துக்கு சில காலம் முன்பே பணத்தை வெளியே எடுக்க ஆரம்பித் திடுவோம்.

சிறு முதலீட்டாளர்கள் கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்கிறார்களா?

மிக குறைவான சிறு முதலீட்டா ளர்கள்தான் கடன் சார்ந்த மியூச்சு வல் பண்ட்களில் முதலீடு செய் கிறார்கள். பங்குச்சந்தை சார்ந்த முதலீட்டாளர்களுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு.

உங்கள் அனுபவத்தில் சிறுமுதலீட் டாளர்கள் செய்யும் தவறு என்ன?

நம் ஊரில் பி.எப். கணக்கை எப்போது எடுக்க வேண்டும், எடுக்க லாமா வேண்டாமா என்று கேட்க மாட்டார்கள். அது ஓய்வுகாலத் துக்கு என்று மக்களுக்கு புரிகிறது. இதேபோலதான் அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட பல இடங்களில் பங்குச்சந்தையை ஓய்வு காலத்துக்கு ஏற்ற முதலீடாக பார்க்கிறார்கள். ஆனால் நாம் மட்டும் பங்குச்சந்தையில் ஒரு வருடம் முதலீடு செய்யலாமா, மூன்று வருடம் முதலீடு செய்யலாமா? முதலீடு செய்ய இன்று நல்ல நேரமா என யோசிக்கிறோம். மேலும் சந்தை நன்றாக உயர்ந்து பிறகு முதலீட்டை ஆரம்பிப்பது, இறங்கிய பிறகு இதுபோதும் என்று தவறாக முடிவெடுப்பதும் நடக்கிறது. தொடர்ந்து முதலீடு செய்ய சிறுமுதலீட்டாளர்கள் தயங்குகிறார்கள். எஸ்.ஐ.பி. முறையில் தொடர்ந்து முதலீடு செய்வது நல்லது. நானும் அதைத்தான் செய்கிறேன்.

உங்களது முதலீடு எங்கு இருக் கிறது?

சுந்தரம் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தில் மட்டுமல்லாமல் ஹெச்.டி.எப்.சி. மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தில் உள்ள பண்ட்களிலும் முதலீடு செய்கிறேன்.

சிறு முதலீட்டாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

அடிக்கடி செய்திகள் பார்க்கா தீர்கள். சந்தை உயர்ந்திருந்தாலும் இன்னும் உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இப்போது முதலீடு செய்யாவிட்டால் இன்னும் சில காலத்துக்கு பிறகு வருத்தப்படு வீர்கள். அதற்காக மொத்த சொத் தையும் எழுதி கொடுக்கத்தேவை இல்லை. எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யுங்கள். சென்ற வருடம் கிடைத்த வருமானம் நிச்சயம் இந்த வருடம் வராது. ஆனால் நீண்ட காலத்தில் நல்ல வருமானம் இருக்கும்.

சென்ற வருடம் சென்செக்ஸ் 30 சதவீதம் உயர்ந்தது? இந்த வருடம் எப்படி இருக்கும்?

இந்த வருட இறுதிக்குள் 34000 முதல் 35000 புள்ளி வரை செல்லக் கூடும். சரியான மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் இன்னும் வளர வாய்ப்பு இருக்கிறது.

karthikeyan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்