சீர்திருத்தங்களை அமல்படுத்து வதன் மூலம்தான் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள தரப் புள்ளிகள் உயரும் என்று ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் இந்நிறு வனம் வெளியிட்ட ஆய்வறிக்கை இந்தியாவின் கடனை திருப்பி செலுத்தும் திறன் மைனஸ் பிபிபி என குறிப்பிட்டிருந்தது. தற்போது அதிலிருந்து ஒருபடி உயர்ந்து `பிபிபி’ என்ற நிலையில் உள்ளது.
இந்நிறுவனத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் இந்தியா பொருளாதார வளர்ச் சியை முடுக்கி விடவேண்டும் என்றும், நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என்றும் குறிப் பிட்டுள்ளது.
அத்துடன் நிதிச் சீர் திருத்தங்களை செயல்படுத்தி னால்தான் தரச்சான்றில் இந்தியா குறிப்பிடத்தக்க புள்ளிகளை எட்ட முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) உயர வேண்டும். நிதிப் பற்றாக்குறை குறைய வேண்டும். அதற்கேற்ப ரிசர்வ் வங்கியின் கடன் வழங்கு கொள்கைகள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. நிதி சீர் திருத்தங்களைச் செயல்படுத்தும் போதுதான் வெற்றி கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு முழுமையான வரும் நிதி ஆண்டுக்கு (2015-16) தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப் படுத்துவதற்கான நடவடிக்கைகள் பெருமளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, இருப்பினும் இது ஒன்றுதான் பிரச்சினை என இருந்தால் அதை சில ஆண்டு களுக்கு முன்பே இந்தியா எடுத் திருக்க வேண்டும், பற்றாக்குறை யைக் குறைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறையைக் குறைப் பது என்பது படிப்படியாகத்தான் நிகழும். இதேபோல இந்தியாவின் கடனை திரும்பச் செலுத்துவது தொடர்பான புள்ளிகளும் உயர் வதற்கு மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிதிப் பற்றாக்குறை மற்றும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நாடு களுக்கு பிபிபி என்ற குறியீட்டை இந்நிறுவனம் அளித்துள்ளது. இந்த பட்டியலில் பிரேசில், கொலம்பியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தென்னாப் பிரிக்கா, உருகுவே உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
இந்த பட்ஜெட்டில் வளர்ச்சிக் கான நடவடிக்கைகள் இடம் பெறும். மின் துறை தொடர்பான சீர்திருத்தங்கள், கட்டுமானத்தை ஊக்குவிக்கும் செயல் திட்டங்கள் மட்டுமின்றி பற்றாக்குறையைக் குறைப்பதற்கான நடவடிக்கை கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
16 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago