மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு உயர்வு

By செய்திப்பிரிவு

2013-14ம் நிதி ஆண்டில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்துமதிப்பு 40000 கோடி ரூபாய் அதிகரித்து 8.6 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த தகவலை இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சங்கம் தொகுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கிறது.

சொத்துகளை நிர்வகிப்பதில் ஹெச்.டி.எஃப்.சி. மியூச்சுவல் ஃபண்ட் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 1.13 லட்சம் கோடி ரூபாய்.

இதற்கடுத்து ஐ.சி.ஐ.சி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் 1.07 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை நிர்வகிக்கிறது. ரூ. 1 லட்சம் கோடி நிர்வகிக்கும் பட்டியலில் ஐ.சி.ஐ.சி.ஐ. இப்போதுதான் இடம் பிடித்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் சொத்துமதிப்பு 22 சதவீதம் அதிகரித்திருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் துறையில் அதிக வளர்ச்சி ஐ.சி.ஐ.சி.ஐ.தான். ஒரு வருடத்துக்கு முன்பு இந்த நிறுவனம் நிர்வகிக்கும் சொத்துமதிப்பு 87,000 கோடி ரூபாயாக இருந்தது.

இதற்கு அடுத்து பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 15 சதவீதம் வளர்ந்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE