தொடர்ந்து பத்து வர்த்தக தினங்களாக நிப்டி உயர்ந்து வருகிறது. 2007-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து 10 நாட்கள் நிப்டி குறியீட் டெண் இப்போதுதான் உயர்கிறது. ஆனால் அதேசமயம் சென்செக்ஸ் இந்த கால கட்டத்தில் சில வர்த்தக தினங்களில் சிறிதளவு சரிவைச் சந்தித்தது.
இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 21 முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை நிப்டி தொடர்ந்து பத்து நாட்கள் உயர்ந்தது.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 122 புள்ளி கள் உயர்ந்து 29682 புள்ளியில் முடிவடைந்தது. ஆனால் வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 29741 புள்ளி வரை சென்செக்ஸ் சென்றது.
நிப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 8952 புள்ளியில் முடிவடைந்தது. 9000 புள்ளியை நெருங்கி வந்தா லும் அந்த இலக்கை நிப்டி இன்னும் தொடவில்லை.
முக்கிய குறியீடுகள் உயர்ந்தாலும் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகளில் பெரிய ஏற்றமோ, இறக்கமோ இல்லை. ஆனால் சில குறியீடுகளில் ஏற்றம் இருந்தது. புதன்கிழமை வர்த்தகத்தில் அந்நிய முதலீட் டாளர்கள் 1,723 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளில் முதலீடு செய்தார்கள்.
முக்கிய செய்திகள்
வணிகம்
17 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago