ஆப்பிள் நிறுவனம்: காலாண்டில் அதிக லாபம்

By ராய்ட்டர்ஸ்

ஆப்பிள் இன்கார்ப்பரேஷன் நிறுவ னத்தின் காலாண்டு வருமானம் அனைவரது எதிர்பார்ப்புகளையும் மிஞ்சி அதிகபட்ச லாபத்தை ஈட்டியுள்ளது.

நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் அதிகபட்ச லாபத்தை ஆப்பிள் நிறுவனம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரிய திரைகளைக் கொண்ட ஐ-போன் விற்பனை அதிகரித்தது மற்றும் விடுமுறைக்கால விற்பனை மற்றும் சீனாவில் இந்நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனை 70 சதவீதம் அதிகரித்தது ஆகியன நிறுவன லாபம் உயர்வதற்குக் காரணமாக அமைந்தன.

இந்நிறுவனம் 7.45 கோடி ஐபோன்களை டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் விற்பனை செய்துள்ளது.

இந்நிறுவனத் தயாரிப்புகள் 7 கோடி அளவுக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையும் மிஞ்சி கூடுதலாக 45 லட்சம் ஐ-போன்கள் விற்பனை யாகியுள்ளன. நிறுவனத்தின் வருமானம் 7,460 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருமானம் 5,760 கோடி டாலராகும்.

நிறுவனத்தின் லாபம் 1,800 கோடி டாலராகும். பொது மக்களிடமிருந்து பங்குகளைத் திரட்டிய ஒரு நிறுவனம் இந்த அளவுக்கு லாபம் ஈட்டியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

நிறுவனத்தின் நிதி வளம் 17,800 கோடி டாலராக உயர்ந்துள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்தார். நிறுவ னத்தின் லாபம் உயர்ந்ததால் நிறுவன பங்கு விலை 5 சதவீதம் அதிகரித்து 114 டாலருக்கு வர்த்த கமானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

16 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்