வாஷிங்டன் காஸ் நிறுவனத்துடன் ஹெச்சிஎல் ஒப்பந்தம்

By ஐஏஎன்எஸ்

ஹெச்சிஎல் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் காஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனம் 11 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் சேவையை செய்து வருகிறது. இந்த நிறுவனத்துடன் 30 மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது ஹெச்சிஎல்.

அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் காஸ் நிறுவனம், வீடுகள் மற்றும் வர்த்தக, தொழில் பயன்பாடுகளுக்கான இயற்கை எரிவாயு விநியோகித்து வருகிறது. அமெரிக்காவின் கொலம்பியா, மேரிலேண்ட், மற்றும் வெர்ஜீனியா மாகாணங்களில் இந்த நிறுவனம் செயல்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் எங்களது வாடிக்கையாளர் விவரங்கள், சேவை மற்றும் நடைமுறைகளில் மேம்பாடு இருக்கும் என்று தெரிவித்துள்ளார் வாஷிங்டன் காஸ் நிறுவனத்தின் வர்த்தகத் துறையின் பிராந்திய தலைவர் நாசர் அகாரி.

ஹெச்சிஎல் நிறுவனம் எங்களது வாடிக்கையாளர் சேவைக்கு உதவும் என்று அவர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹெச்சிஎல் நிறுவனம் வாடிக் கையாளர் சேவை மற்றும் பில்லிங் மென்பொருட்களை வழங்கும் என்றும் அவர் தெரி வித்தார். வேலைதிறனுக்கான திட்டங்கள், தீர்வுகள், மொபைல் நெட்வொர்களில் கவனம் செலுத்துவது போன்ற மென் பொருட்களை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேசிய ஹெச்சிஎல் நிறுவனத்தின் பொதுச்சேவைகள் துறை எக்ஸிகியூட்டிவ் துணைத்தலைவர் டோட் கிரன்டல் ‘இந்த ஒப்பந்தத்தின் மூலம் வாஷிங்டன் காஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மற்றும் விநியோக முறைகளில் மாற்றம் இருக்கும் என்று குறிப்பிட்டார். தொழில்நுட்ப சேவைக்கான இந்த முதலீடு, அந்த நிறுவனத்தின் இலக்குகளை அடைய உதவும் என்று கூறியுள்ளார். எனினும் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு குறித்து தெரிவிக்கப் படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

மேலும்