ஸ்பைஸ்ஜெட்டில் முன்னாள் நிறுவனர் முதலீடு?

By ராய்ட்டர்ஸ்

நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் அதன் முன்னாள் இணை நிறுவனர் அஜய் சிங் ரூ. 1,200 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிகிறது.

இதற்கான முழுமையான திட்டம் வரும் திங்கள் கிழமை வெளியாகலாம் என்று தெரிகிறது. இவர் மட்டுமல்லாமல் புதிய பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்களும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில செய்தி நிறுவனங்கள், கலாநிதி மாறன் வசம் இருக்கும் அனைத்து பங்குகளையும் அஜய் வாங்கப்போகிறார் என்று தெரிவித்துள்ளன

2010-ம் ஆண்டு கலாநிதி மாறன் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை வாங்கிய பிறகு அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்து அஜய் சிங் விலகினார். கடந்த சில தினங்களாக விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தில் அஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த விவகாரம் பற்றி தெரிந்த நபர்கள் கூறுகிறார்கள். ஏற்கெனவே அஜய் சிங் வசம் 4 சதவீதம் அளவுக்கு ஸ்பைஸ் ஜெட் பங்குகள் இருக்கின்றன.

பாரதிய ஜனதாவின் தேர்தல் பிரச்சார குழுவில் உறுப்பினராக இருந்தவர் அஜர் சிங். முன்பு என்.டி.ஏ அரசின் தொலைத் தொடர்பு கொள்கையை வகுத்தவர். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனின் நண்பர், தொடர் தொழில்முனைவோர் என அஜய் சிங்குக்கு பல முகங்கள் இருக்கிறது. இப்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு 2,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருக்கிறது.

அஜய் முதலீடு செய்வதாக வந்த செய்தியை அடுத்து ஸ்பைஸ்ஜெட் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் உயர்ந்து முடிவடைந்தது. வர்த்தகத்தின் முடிவில் 19.70 சதவீதம் உயர்ந்து 15.80 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிவடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்