கடந்த 10 வருட காலமாக ஆட்டொமொபைல் உலகை கலக்கி கொண்டிருக்கிறது ரிமோட் மற்றும் ஸ்மார்ட் சாவிகள். சாதாரணமாக 500 ரூபாயில் தொடங்கி ரூ. 20 லட்சம் வரை இந்த ரிமோட் சாவிகள் விற்பனைக்கு உள்ளன.
தூரத்திலிருந்தபடி ரிமோட் சாவியை இயக்கி, கார்களை கண் சிமிட்ட வைத்து அனைவரது கவனத்தையும் கவர்ந்து பந்தாவாக காரில் வந்து உட்காருவதையே, பலரும் விரும்புகிறார்கள். கார்களின் கதவுகளைப் பூட்டவும், திறக்கவும், என்ஜினை இயக்குவதற்கும் இந்த சாவிகள் பெரிய வரப்பிரசாதம். ஆனால் அதே நேரத்தில், இந்த சாவிகளை `ஹாக்’ செய்து கார்களை திருடுவதற்கும் இப்போது ஆட்கள் முளைத்துவிட்டனர்.
ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு விட்டு திரும்பும் இடைவெளியில் பல லட்சம் போட்டு வாங்கிய கார்களை பறிகொடுத்தவர்கள் பலர். கோவையில் ஒரு தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10-க்கும் அதிகமான கார்களில் இருந்த ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் திருடப்பட்டன. சில கார்களில் ஸ்பீக்கர்களை திருடும் முயற்சிகளும் நடந்துள்ளன.
இந்நிலையில் ரிமோட் சாவிகளைப் பராமரிப்பது குறித்து கார்களின் எலெக்ட்ரானிக் பிரிவு தொழில்நுட்ப வல்லுநரான சுரேஷ் கூறியது:
கார்களின் சாவிகள், முந்தைய காலகட்டத்தில் இருந்தது போல் இல்லாமல் இப்போது எல்லாமே நவீனமயமாகிவிட்டன. இதற்கேற்றார்போல் கார் திருட்டில் ஈடுபடுபவர்களும் தொழில்நுட்ப ரீதியாக தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இவர்கள் குறிவைப்பது குறைந்த விலை கார்களையோ அதிக விலை கார்களையோ அல்ல. நடுத்தர மக்கள் வாங்குகிற ஓரளவு மதிப் புள்ள கார்கள்தான். ஏனென் றால் அவற்றை தான் செகண்ட் ஹேண்டில் விற்பனை செய்வது மிகவும் எளிது.
பொதுவாக கார்களின் ரிமோட் சாவிகள் ரேடியோ அதிர் வலைகளை செலுத்தித்தான் கார்களின் கதவுகளைத் திறக்கவும், அவற்றை இக்னைட் செய்யவும் வைக்கின்றன. ரிமோட் கீயிலிருந்து அதிர்வலைகளை கைப்பற்றி அதனை தங்களுடையதாக்கி உடனடி யாகக் கார்களின் ரிமோட் சாவிகளை செயலிழக்க வைக்க முடியும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தித் தான் கார்களை திருடி கைவரிசை காட்டுகின்றனர். இதற்கு நம்மை அறியாமலேயே நாம் இடம் கொடுத்து விடுகிறோம்.
கார்களுக்கு இரண்டு சாவிகள் வழங்கப்பட்டிருக்கும். இதில் இன்னொரு சாவிகளை எப்போதும் பாக்கெட்டிலோ, காரின் உள்ளேயோ வைத்துக் கொண்டிருக்க கூடாது. புதிதாக கார் வாங்கினால் அதற்கு உடனடியாக பதிவு எண் பெற வேண்டும். நீண்ட நாள்களுக்கு ஃபார் ரிஜிஸ்ட்ரேஷன் என்றே ஓட்டக் கூடாது., புதிய கார்களை திருடுபவர்கள் ஏராளம்.
கார்களை யாராவது தொடவோ, பிரயோகம் செய்யவோ முயன்றால் உடனடியாக ஓசை எழுப்பி அதனை உரிமையாளருக்கு காட்டிக்கொடுக்கும் விதத்தில் கார்களின் இருபுறமும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.ஆனால் சிலர் இந்த மின் விளக்குகளை லாவமாக நொடிப் பொழுதில் செயல் இழக்க செய்து கார்களை எளிதில் உடைத்து விடுகிறார்கள்.
இதற்கு மாற்றாக சில தொழில்நுட்பங்கள் உள்ளன. அதாவது, காரின் பக்காவாட்டில் சிறிய கேமரா ஒன்றைப் பொருத்த வேண்டும். அந்த கேமரா வெளிப்புற ஒளியை உள்வாங்கி காரினுள் உள்ள அப்சார்பரிடம் அனுப்பும், ஏதாவது தவறுதலாக பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய சூழல் வந்தால் உடனடியாக அது சம்பந்தமான தகவலை உரிமையாளரின் மொபைலுக்கு தெரியப்படுத்திவிடும். இத்தகைய தொழில்நுட்பத்தை மேலை நாடுகளில் தற்போது பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்துள்ளது.
பழைய கார் வாங்கும் போது, ஒரு வேளை அந்த காருக்கு ரிமோட் சாவி முறை இருந்தால், அந்த சாவியின் ஆயுள் காலம் என்ன? அது முறையாக பெறப்
பட்ட சாவிதானா? ஏற்கெனவே காரை வைத்திருந்த உரிமை யாளர் ஒரிஜினல் சாவியைத் தொலைத்துவிட்டு ஏதாவது டூப்ளிகேட்டை தலையில் கட்டிவிட்டாரா என்று பார்க்க வேண்டும். அப்படி ஏதாவது பிரச்சினையென்று தெரிய வந்தால் முற்றிலுமாக அந்த காரையே தவிர்த்துவிடலாம்.
பெரும்பாலும் கார் சாவியை பராமரிப்பது பற்றி யோசிப்பதே இல்லை. எனவே, குறைந்தது 6 மாதத்துக்கு ஒரு தடவையாவது ரிமோட் சாவியின் நிலை எப்படி இருக்கிறது என்று சோதனை செய்ய வேண்டும். கார் சாவிகளை
அந்தந்த நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர்களில் மட்டுமே இந்த சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். முன் பின் தெரியாத சிறு மெக்கானிக்குகளிடம் சாவியை சர்வீஸ் செய்யக் கூடாது .
ரிமோட் சாவியின் பேட்டரிகளை சரியாக பராமரிக்க வேண்டும். ஏனென்றால், குறிப்பிட்ட அளவு மின்சாரம் தராத பேட்டரிகளை ரிமோட்டில் பொருத்தக்கூடாது. இது காரின் இக்னீசியனில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். காரின் சாவி முற்றிலும் பிரச்சினைக் குள்ளாகும் போது, டூப்ளிகேட் சாவியை நம்புவதற்கு பதிலாக முறையாக ஒரிஜினல் சாவியை வாங்குவது ரொம்பவே நல்லது. ஏனென்றால், டூப்ளிகேட் சாவி பல நேரங்களில் சரியாக வேலை செய்யாது .
சில நிறுவனங்கள் சேஃப்டி கீ எனப்படும் புதிய வகை ஸ்மார்ட் சாவிகளை அறிமுகம் செய்துள்ளன.
இதனை உபயோகித்தால் சீட் பெல்ட் அணியாமல் இருப்பதை, வெளியாட்களின் நோட்டமிலை, காரில் பெட்ரோல் குறைவதை எல்லாம் தன்னில் உள்ள விளக்கை கலர் கலராக எரிய வைத்து உரிமையாளருக்கு தெரியப்படுத்தும்.
எனவே, சாவிதானே என்று அசிரத்தையாக இருக் காமல், பல லட்சம் மதிப்பிலான கார் களின் காவலன் என்று சாவிகளை நடத்தினால் பிரச் சினைகளி லிருந்து தப்பலாம்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago