மக்களவையில் நேற்று நிறுவன சட்டம் 2014 நிறைவேறியது. முந்தைய சட்டத்தில் நிறுவனங்கள் செயல்படுவதில் இருந்த சிக்கல்கள் இதில் திருத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதி மற்றும் நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
இந்தியாவில் தொழில் தொடங்குவதை எளிமையாக்குவதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக அவர் கூறினார். இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதில் அரசுக்கு எந்தவித உள்நோக்கமும் கிடையாது என்றும் அவர் இது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பதிலளிக்கையில் குறிப்பிட்டார்.
முந்தைய நிறுவனச் சட்டத்தில் உள்ள சில விதிமுறைகள் இந்தியாவில் தொழில் தொடங்குவதை மிகுந்த சிக்கலானதாக ஆக்கியிருந்தன. மேலும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலைத் தடுப்பதாகவும் சில சட்டவிதிகள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
2013 நிறுவனச் சட்டம் இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதில் உள்ள சில பிரச்சினைகளை திருத்தும் வகையில் நிறுவன சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. முந்தைய நிறுவன சட்டத்தில் இயக்குநர் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் அந்நிறுவன பங்குதாரர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என இருந்தது. உலகில் எந்தப் பகுதியிலும் இத்தகைய விதிமுறை கிடையாது. இதனால் போட்டி நிறுவனங்களுக்கும் இயக்குநர் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் தெரிந்துவிடும்.
எனவே புதிய சட்டத்தில் இதற்கான திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜேட்லி சுட்டிக் காட்டினார். அத்துடன் நிறுவனங்கள் ரூ. 100 கோடி மதிப்பு வரையிலான பரிவர்த்தனை அல்லது நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பில் 10 சதவீதம் வரையிலான பரிவர்த்தனைக்கு பங்குதாரர்களின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை என புதிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
முந்தைய சட்டத்தில் ரூ. 10 கோடி வரையிலான பரிவர்த்தனையை மேற்கொள்வதற்குக் கூட பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற சட்டமிருந்தது. இந்த விவாதத்தில் குறிக்கிட்டு பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த மசோதாவை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பலாம். முன்பு இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டது என்று குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
8 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago