எஸ்ஜேவிஎன் மற்றும் மாங்கனீசு ஓர்(எம்.ஓ.ஐ.எல்.) நிறுவனங்களில் இருந்து 10 சதவீத பங்குகளை நடப்பு நிதி ஆண்டில் விலக்கிக்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.
பங்கு விலக்கு செய்யப்படும் நிறுவனங்களின் பட்டியலில் இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்க்கப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். இந்த பங்கு விலக்கல் மூலம் 1,200 கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.ஜே.வி.என் நிறுவனத்தின் 10 சதவீதம் அல்லது 37.22 கோடி பங்குகளை விலக்கிகொள்வதன் மூலம் 890 கோடி ரூபாயும், மாங்கனீசு ஓர் நிறுவனத்தின் 10 சதவீதம் அல்லது 1.34 கோடி பங்குகளை விலக்கி கொள்வதன் மூலம் 400 கோடி ரூபாயும் திரட்ட முடியும்.
இப்போதைக்கு எஸ்.ஜே.வி.என் நிறுவனத்தில் 89.97 சதவீதமும், எம்.ஓ.ஐ.எல். நிறுவனத்தில் 80 சதவீதமும் அரசாங்கத்தின் பங்கு இருக்கிறது. இம்மாத ஆரம்பத்தில் செயில் நிறுவனத்தின் ஐந்து சதவீத பங்குகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. இதற்கு முதலீட்டாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.
நடப்பு நிதி ஆண்டில் 43425 கோடி ரூபாயை பங்கு விலக்கல் மூலம் திரட்ட மத்திய அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா, என்.ஹெச்.பி.சி., பவர் பைனான்ஸ் கார்ப், ஆர்.இ.சி. மற்றும் கன்டெயினர் கார்ப் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலக்கல்கள் விரைவில் வர இருக்கின்றன.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
3 hours ago
வணிகம்
3 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago