நாட்டின் ஒட்டு மொத்த விற்பனை விலைக் குறியீட்டெண் (டபிள்யுபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 0% ஆக சரிந்தது. கடந்த ஐந்தரை ஆண்டுகளில் பணவீக்கம் இந்த அளவுக்குக் குறைந்தது இதுவே முதல் முறையாகும்.
பணவீக்கம் குறைந்ததைத் தொடர்ந்து கடனுக்கான வட்டி விகித்ததைக் குறைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ரிசர்வ் வங்கிக்கு உருவாகியுள்ளது. சர்வதேச அளவில் உணவுப் பொருள்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவு விலை குறைவு காரண மாக ஒட்டுமொத்த விலை அடிப் படையிலான பணவீக்கம் குறைந்துள்ளது. அக்டோபர் மாதம் இது 1.77 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மொத்த பணவீக்க விகிதம் 7.52 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக உணவு பணவீக்கமும் சீராக உள்ளது. பருவமழை சீராக உள்ளதும் உணவு பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. விலை உயர்வு நெருக்கடிகள் இல்லாமல் நவம்பர் மாத பணவீக்க விகிதம் கட்டுப் பாட்டுக்குள் உள்ளது.
எரிபொருள்களுக்கான குறீயீடு நவம்பர் மாதத்தில் 5.2 சதவீதமாக உள்ளது அடிப்படை பொருட்கள் 1 சதவீதமும், உற்பத்தி பொருட்களுக்கான குறியீட்டு எண் 0.3 சதவீதமாகவும் உள்ளது.
வெங்காயத்தின் விலை குறியீடு 56.28 சதவீதமாக இருந்தது. இது கடந்த மாதம் 59.77 சதவீதமாக இருந்தது. மொத்த விலை குறி யீட்டில் உணவுப்பொருட்கள், பால், முட்டை, இறைச்சி இவற்றின் பங்கு 4.36 சதவீதமாக இருந்தது.
மொத்த விலை குறியீட்டில் சில்லரை விலை வீக்கம் 4.38 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 11.16 சதவீதமாக இருந்தது.
தொழில்துறை உற்பத்திக் குறியீடு 7.6 சதவீதமாக இருந்ததும், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை கட்டுக்குள் வைத்திருந்ததும் இதற்கு காரணமாகும். நுகர்வோர் விலை குறீயீட்டை 2016 ஜனவரியில் 8 சதவீதமாகவும் 2016 ஜனவரியில் 6 சதவீதமாகவும் வைத்திருக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. நடப்பு பற்றாக்குறை 5.5 சதவீத மாக உள்ளது. மொத்த விலைக் குறியீடும், நுகர்வோர் பணவீக்கத்தின் சரிவு காரணமாக மொத்த பணவீக்கமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்த விலை அடிப் படையிலான குறியீட்டெண் இப்போதுதான் 0% என்ற நிலையை எட்டியுள்ளது. 2009-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பூஜ்ஜியத்துக்கும் கீழாக சரிந்து மைனஸ் 0.9 சதவீதம் என்ற நிலையை எட்டியது குறிப்பிடத்தக்கது.
பணவீக்க விகிதம் சிறப்பாக கையாளப்படுகிறது. உற்பத்தித் துறையின் வளர்ச்சி கடந்த மாதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இது தொடர்ச்சியாக கையாளப்பட வேண்டும் என்று கூறியுள்ளது ஃபிக்கி இந்தியாவின் ஆண்டு பணவீக்க விகிதம் மொத்த விலை குறீயீட்டு அளவை அடிப்படையாகக் கொண்டுதான் கணக்கிடப்படுகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago