புதிய வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

By செய்திப்பிரிவு

பல வாரங்களாக நீடித்து வந்த சர்ச்சைக்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. புதிய வங்கிகளுக்கு அனுமதி அளிப்பதற்கு கொள்கை ரீதியில் எந்த தடையும் இல்லை. இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி உரிய முடிவுகளை எடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

மார்ச் மாத இறுதிக்குள் புதிய வங்கி பற்றிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் மார்ச் 5- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் ரிசர்வ் வங்கியால் முறையாக அறிவிக்க முடியவில்லை. மார்ச் 5-ம் தேதி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. மார்ச் 12-ம் தேதி ரிசர்வ் வங்கி தேர்தல் ஆணையத்தை அணுகியது.

செவ்வாய்க்கிழமை காலையில் நிதிக்கொள்கை அறிவிக்கும்போது, தேர்தல் ஆணையத்துடனான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதனால் புதிய வங்கிகள் பற்றி அறிவிக்க முடியவில்லை என்று ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

ஆனால் மாலையில் தேர்தல் ஆணையம் ஒப்புதல் கொடுத்துவிட்டது.தேர்தல் ஆணையம் ஒப்புதல் கொடுத்தவிட்டபடியால், கூடிய விரைவில் புதிய வங்கிகளுக்கான அனுமதி யை ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE