தங்கம் இறக்குமதி நவம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. சுமார் ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கம் நவம்பர் மாதத்தில் மட்டும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. பண்டிகைக் காலம் மற்றும் திருமண தேவைகள் காரணமாக ஆபரண நகைகளை மக்கள் அதிகம் வாங்குவதால் இறக்குமதி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் என தெரிகிறது.
கடந்த வருடத்தில் இதே மாதத்தில் விலையுயர்ந்த உலோகங்களின் இறக்குமதி மதிப்பு 8,350 கோடி டாலராக இருந்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ள நிலையில் தங்க இறக்குமதி அதிகரித்திருப்பது புதிய கவலைகளை மத்திய அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் மாத தங்க இறக்குமதி காரணமாக வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஒன்றரை வருடங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் தங்க இறக்குமதியின் வர்த்தகப் பற்றாக்குறை 9.57 சதவீதமாக இருந்தது. அதற்கு முன்பு மே 2013ல் வர்த்தகப் பற்றாக்குறை 20.1 பில்லியன் டாலராக இருந்தது.
தங்க இறக்குமதி கடந்த மாதங்களில் அதிகரித்தபடியே உள்ளது. ஜூலை மாதம் 1.81 பில்லியனாக இருந்த தங்க இறக்குமதி ஆகஸ்ட் மாத 2.03 பில்லியனாக உயர்ந்தது. செப்டம்பர் மாதம்3.75 பில்லியன் டாலராகவும் அக்டோபர் மாதம் 4.17 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை அந்நிய நாணய செலாவணி மதிப்பை விட அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஜிடிபி 4.8 சதவீதமாக உள்ளது.
ஆபரண தேவைகளுக்காக இந்தியா அதிக தங்கத்தை இறக்குமதி செய்கிறது. இது குறித்து ஐசிஆர்ஏ ரேட்டிங் நிறுவனம் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. செப்டம்பர் - நவம்பர் காலாண்டில் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
9 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago