பார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியல்: முதலிடத்தில் ஐஓசி

By பிடிஐ

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) பார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இதற்கு அடுத்த இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. மூன்றாமிடத்தை பாரத் பெட்ரோலியம் பிடித்துள்ளது.

ஐஓசி நிறுவனத்தின் வருமானம் ரூ. 5,00,973 கோடியாகும். முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸின் வருமா னம் ரூ.4,44,021 பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ரூ. 2,67,718 கோடி வருமானத்துடன் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் (ஹெச்பிசிஎல்) ரூ. 2,36,797 கோடி வருமானத்துடன் நான்காமிடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டும் ஐஓசி, ரிலையன்ஸ், பிபிசிஎல், ஹெச்பி சிஎல் ஆகியன நான்கு இடங்களில் இருந்தன. நிறுவனங்களின் மொத்த வருமானம் இந்த ஆண்டு 9.5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் லாபம் 4.5 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்திய நிறுவனங்களின் மொத்த பங்களிப்பு 38 சதவீதமாகும்.

இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.6 சதவீதம் அதிகமாகும். தனியார் நிறுவனங்களின் பங்க ளிப்பு 56.7 சதசவீதமாகும். இவற் றின் வருமானம் 10.2 சதவீதம் அதிகரித்துள்ளது. 5.3 சதவீத பங்குகளைக் கொண்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி 25.5 சதவீதமாக உள்ளதாக பார்ச்சூன் இதழ் குறிப்பிட்டுள்ளது.

பட்டியலில் ரூ. 2,36,502 கோடி வருமானத்துடன் 5-வது இடத்தில் டாடா மோட்டார்ஸ், ரூ. 2,26,944 கோடி வருமானத்துடன் பாரத ஸ்டேட் வங்கி 6-வது இடத்திலும், ஓஎன்ஜிசி ரூ. 1,82,084 கோடி வருமானத்துடன் 7-வது இடத்திலும், டாடா ஸ்டீல் ரூ. 149,663 கோடி வருமானத்துடன் 8-வது இடத்திலும், எஸ்ஆர் ஆயில் ரூ.99,473 கோடி வருமானத்துடன் 9-வது இடத்திலும், ஹிண்டால்கோ நிறுவனம் ரூ. 89,175 கோடி வருமானத்துடன் 10-வது இடத்திலும் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

6 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

மேலும்