ஸ்கார்பியோ, டொயோடா, மிட்சுஷிபி, பல்சர், யமஹா என பல உயர் ரக வாகனங்கள் சர்வசாதரணமாக ஆன்லைனின் விற்பனைக்கு வருகின்றன. நேரில் சென்று டீலரிடமோ அல்லது சந்தையிலோ வாகனங்களை வாங்கும்போது உள்ள பாதுகாப்பும் நம்பகத்தன்மையும் ஆன்லைனில் வாகனங்களை வாங்கும் போது இருக்குமா என்பது பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
ஆன்லைனில் வாகன விற்பனை என்று சொன்னாலே பலரும் பின் வாங்குகிறார்கள். ஏனென்றால் லட்சங்களில் பணம் போட்டு, ஒரு டீலரை பிடித்து, காரை ஓட்டிப் பார்த்து வாங்குவதில் உள்ள திருப்தி ஆன்லைனில் கிடைக்காது என்பதே பலரது தயக்கத்துக்குக் காரணமாகும். பைக் வாங்குவதற்கும் இதே நிலை தான்.
எனவே சந்தைகளில் வாங்குவது போல் ஆன்லைனில் வாகனங்கள் வாங்குவது எத்தனை பாதுகாப்பானது வசதியானது? போன்ற கேள்விகளுடன் டெல்லியை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும், காடி.காம் (www.gaadi.com) ஆன்லைன் வாகன விற்பனை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான, உமங் குமாரை சந்தித்தோம். ஆன்லைனில் வாகனங்களை வாங்குவது குறித்து அவர் கூறியது:
இன்றைக்கு பெரும்பாலான வர்த்தகம் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. ஆனால் கார் போன்ற விலையுயர்ந்த பொருட் களை ஆன்லைனில் வாங்க வேண்டுமென்றால், பொதுமக்கள் கொஞ்சம் பின் வாங்குவது உண்மைதான். ஆனால் இதில் உள்ள வசதியை புரிந்து கொண்டு இணையம் மூலம் கார்களை வாங்குபவர்களின் எண்ணிக் கையும் அதிகரித்து வருகிறது. எங்களுடைய இணையத்தின் மூலம் மாதம் 4,000- த்துக்கும் அதிகமான கார்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
நேரே சந்தைக்கு சென்று கார்களை வாங்குவதற்கும் ஆன்லைனில் கார் வாங்கு வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. சந்தைக்கு சென்றால், ஒவ்வொரு நிறுவனத்துக்கும், தனித் தனியாக தான் ஷோ ரூம் இருக்கும். இதில் அலைச்சல் அதிகம். அங்கு நாம் விரும்புகிற அத்தனை மாடல் வாகனங்களின் சாதக, பாதக தன்மைகளை அறியமுடியாது. மேலும் பழைய கார்களை வாங்க செல்லும் போது, அந்தக் காரை எப்படியும் விற்பனை செய்து விட வேண்டும் என்று திடீரென சர்வீசிங் செய்து, துடைத்து பள பளவென வைத்திருப்பார்கள் ஆனால் வாங்கிய பின்னர் யார் வாரண்டி, கேரண்டியல்லாம் தருவது?
எங்கள் இணையதளத்தில், இந்தியா முழுக்க பல்வேறு நிறுவ னங்களின் கார்களை கொண்டுள்ள 1200-க்கும் அதிகமான டீலர்களின் மூலம் விற்பனை மேற்கொண்டு வருகிறோம். விற்பனையாகிற வாகனங்களுக்கு ஏற்ப டீலர்கள் எங்களுக்கு கமிஷன் தொகை அளிக்கிறார்கள். காடி.காம் கார்களுக்கு கேரண்டி, வாரண்டி போன்ற வசதிகள் உள்ளன. பழையது புதியது என இரண்டு வகையான கார்களையும் விற்பனை செய்கிறோம். இதில், கார் வாங்க விரும்புவர்கள் தங்க ளது தேவைகளை சொல்லலாம்.
பழைய கார்களை வாங்க விரும்புவர்கள், என்ன விலை, என்ன மாடல், எவ்வளது தூரம் ஓடியுள்ள கார், என்ன கலர், நிறுவனம் என தங்களுக்கு தேவையானவற்றை சொல்லலாம். சொல்லியது மட்டுமில்லாமல், அவர்களின் தேவைகளுக்கும் பட்ஜெட்டிற்கேற்ப என்னென்ன கார்கள் உள்ளன என்பது குறித்தும் அவர்களின் பார் வைக்கு வைக்கப்படும். அதில் அவர்களுக்கு எது சரிப்பட்டு வருமோ அதைத் தேர்வு செய்யலாம்.
இதன்படி விரும்பிய கார்கள் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் காரை நேரில் பார்த்து, ஓட்டிப்பார்த்து வாங்கிக் கொள்ளலாம். இதற்காக மெக்கானிக் மற்றும் பொறியா ளரை அனுப்பி வைக்கிறோம். கார் பிடித்திருந்தால் வாங்கிக் கொள்ளலாம். இதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது. பிடித் திருக்கும் பட்சத்தில் கடனுதவியும் செய்து தருகிறோம்.
ஆன்லைனில் கார்கள் விற்கி றோம் என்பதற்காக, ஏனோ தானோ என்று கிடைக்கிற கார்களை தள்ளிவிடுவதில்லை. கார் விற்பனையில் சிறந்து விளங்கிய கார்தேகோ நிறுவனத்தாரும் எங்களுடன் இணைந் துள்ளனர். இந்தியா முழுவதும் ஏராளமான டீலர்களை கொண்டுள்ளோம். புதிய கார்களை வாங்குவதில் பிரச்சினைகள் இல்லை. ஆனால் பழைய கார்களை வாங்குகிறபோது, பொதுமக்கள் என்ன மாதிரியான கார்களை விரும்புகிறார்கள், என்பது தொடர்பாக நாடு தழுவிய அளவில் ஆய்வு ஒன்றை நடத்தினோம். இதில் சென்னையை சேர்ந்தவர்கள் ஜாஸ், மாருதி 800, இண்டிகா, ஐ 20, ஸ்விஃப்ட், ஸ்கார்பியோ கேட்வே போன்ற கார்களை அதிகளவில் விரும்புகிறார்கள்.
சென்னையில் பழைய கார்களை வாங்க விரும்பு பவர்களில் பெரும் பாலானவர்கள் ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை விலையுள்ள கார்களையே விரும்புகிறார்கள். ஆனால் விற்பனை செய்பவர்களோ சரா சரியாக தாங்கள் பயன்படுத் துகிற காரை ரூ. 3 லட்சத்திலிருந்தே விற்க தயாராக உள்ளனர். சென்னையில் ஹூண்டாய், பிஎம்டபிள்யூ, பியட், ரெனால்ட் உள்ளிட்ட கார்களுக்கு அதிக ளவில் டிமாண்ட் உள்ளது. ஆனால் அவை குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் ஐ 10 , இனோவா, பீட், ஸ்கார்பியோ, அக்கார்ட், பஜேரோ போன்ற கார்கள் அதிகளவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
இந்தியாவில் எங்குமில்லாத அளவுக்கு தமிழர்கள், மாருதி 800, ஆல்டோ, அக்செண்ட், லான்சர், சென், சஃபாரி, போன்ற பழைய மாடல் கார்களை அதிகளவில் எதிர்பார்க்கிறார்கள். ஒரு காரை செகன்ட்ஸில் வாங்கும் போது அது 50 ஆயிரம் கி.மீ-க்கும் குறைவாக இருக்க வேண்டுமென்று சென்னையில் 51% பேர் விரும்புகிறார்கள். மேலும் சந்தைக்கு வந்து 3 ஆண்டு பழைய கார்களுக்கே இவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago