வரி செலுத்த வேண்டிய எரிச்சல் Vs ஜிஎஸ்டி: எது உண்மையான வலி?

By விமலாதித்த மாமல்லன்

பேலியோ டயட்டுக்கு மாறிய பிறகு, வாராவாரம் வெண்ணெய் வாங் கியாகவேண்டிய நிர்ப்பந்தத் தில் திருவல்லிக்கேணி பெரிய தெரு ஷண்முகம் கடைக்கு செல்வது வாடிக் கையாகிவிட்டது. பத்து நாள் முன்பு 500 கிராம் வெண்ணெய் ரூ.240 என்றார்.

‘‘அஞ்சு நாள் முன்ன 230-க்குக் குடுத் தீங்களே?’’

‘‘ஒண்ணாந்தேதி வரட்டும். அதான் ஜிஎஸ்டி வருதுல்ல. இதே வெண்ணெய் 250 - 260க்குப் போகும். வெண்ணெய் வாங்கும்போது 12% வரி கட்டணுமாம். அதைக் காய்ச்சி நெய்யா விக்கும்போதும் 12% வரி கட்டணு மாம். 24% வரி போட்டு வித்தா யார் வாங்குவா?’’ என்று பொங்கிவிட்டார்.

பொறுமையாகக் கூறினேன்.. ‘‘நீங்க கட்டற 12% வரிக்கு பில் வாங்கி, நீங்க கட்டவேண்டிய 12% வரியில கழிச்சுக்கப்போறீங்க. இதுல எங்க சார் 24% வரி வருது. நீங்க ஃபேஸ்புக்குல இருக்கீங்களா? நீங்க சொல்றா மாதிரி ஒவ்வொரு இடத்துலயும் வரி போட்டு விலைவாசி கன்னா பின்னானு ஏறக்கூடாதுனு 1986-ல ராஜீவ்காந்தி தலைமையில இருந்த காங்கிரஸ் ஆட்சியில வி.பி.சிங் நிதியமைச்சரா இருந்தப்போ கொண்டுவந்த சீர்திருத்தம்தான், இது எல்லாத்துக்கும் தாத்தா.

நீங்க சைக்கிள் தயாரிக்கிற கம் பெனி வெச்சிருக்கீங்கனு வெச்சுக் குங்க. சைக்கிளுக்கான உதிரி பாகங் களை வெவ்வேற கம்பெனிலேர்ந்து வாங்குவீங்க. ஒவ்வொரு பொருளுக்கான வரிகளையும் சேத்து, நீங்க சைக்கிளாக்கி விக்கும்போது நீங்க சொன்னாப்புல வெண்ணெய்க்கு 12% நெய்க்கு 12%ங்கிற மாதிரிதான் ஒரு காலத்துல இருந்திச்சு. அதைத்தான் 1986-ல MODVATனு சீர்திருத்தி, சைக்கிள் உதிரி பாகங்களுக்கு கட்டின வரிக்கெல்லாம் பில் இருந்தா வரவு வெச்சிக்கணும். சைக்கிளா விக்கும்போது, நீங்க ஏற்கெனவே கட்டின வரியெல்லாம் கழிச்சிட்டு மீதி வரியைக் கட்டினா போதும்னு சீர்திருத்தம் கொண்டாந்தாங்க.

1994-ல நரசிம்மராவ் தலைமை யிலான காங்கிரஸ் அரசாங்கத்துல மன்மோகன் சிங் நிதியமைச்சரா இருந்தப்போ, கச்சாப்பொருள், உதிரி பாகங்கள் மட்டுமில்லாம, உங்க சைக்கிள் கம்பெனியில சைக்கிள் ஃபிரேம் தயாரிக்க வெச்சிருக்கிற மோல்டு மெஷினுக்கான வரியையும் வரவுல வெச்சிக்கிட்டு வரி கட்டும்போது கழிச்சிக்கலாம்னு சொன்னாங்க.

சேவை வரியையும் வரவு வெச்சிக்கிட்டு வரி கட்டும்போது கழிச்சிக்கலாம்னு 2004-ல சொன்னாங்க. அதனால இது புதுசில்லே. நீங்க நினைக்கிறாப்புல, ஜிஎஸ்டி வந்தப்பறம் விலைவாசியெல்லாம் ஏறாது. குறையத்தான் செய்யும். சென்ட்ரலு, ஸ்டேட்டுன்னு இருக்கிற ஏகப்பட்ட வரியை எல்லாம் ஒண்ணாக்கி நாடு முழுக்க எங்கே வரி கட்டியிருந்தாலும், எங்கே வேணும்னாலும் வரவு வெச்சிக்கலாம்னு கொண்டாந்ததுதான் ஜிஎஸ்டி’’ என்று விளக்கினேன்.

‘‘சார், ஒரு அம்மா வீட்டுல செஞ்சி கொண்டாந்து இந்த போளியைக் குடுக் குறாங்க அவங்ககிட்ட நான் என்னத்த பில் கேப்பேன். என்னத்த வரவு வெச்சி, இதை உங்களுக்கு விக்கும்போது என் னான்னு வரி வசூலிப்பேன்?’’ என்றார்.

‘‘வருஷத்துக்கு 20 லட்ச ரூபாய்க்கு கீழே வியாபாரம் பண்ற யாருமே ஜிஎஸ்டியில பதிவு செய்ய வேண்டாம். ஆனா, இதுமாதிரி பதிவு செய்யாதவங்ககிட்ட பொருள் வாங்கற நீங்க, அதுக்கு கட்டவேண்டிய, ஆனா கட்டாம இருக்கிற வரியை நீங்களே கட்டி, வரவுல வெச்சி, கட்டவேண்டிய வரியில கழிச்சிக்கலாமே. ஆக, கொள் முதல்ல இருக்கிற வரியைக் கழிச் சிட்டா, தயாரிப்புச் செலவு, விற்பனைச் செலவு, லாபம்னு கணக்குப் போட்டு நீங்க வெக்கிற உபரி விலைக்கான வரி யைதான் கட்டப்போறீங்க’’ என்றேன்.

ஜென்மத்தில் பில்லே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் வியாபாரத்தில் இனி ஒவ்வொன்றுக்கும் பில் போட்டு கணக்கில் கொண்டுவர வேண்டும். எல்லாமே கணக்கில் வந்துவிட்டால் விற்பனை வரி மட்டுமின்றி, ஆதார், பான்கார்டு, பேங்க் என்று எல்லாமே ஒன்றோடு ஒன்று கோர்க்கப்பட்டுவிட்ட நிலையில், வருமானவரியும் கட்டித் தொலைக்க வேண்டுமே என்ற எரிச் சல்தான் அவரைப் போன்றவர்களின் உண்மையான வலி என்று புரிந்தது.

‘ஜிஎஸ்டி வந்த பிறகு, விலை எப்படி குறையும்?’ என்கிற கேள்வி எல்லோருக்குமே எழுவது சகஜம்தான்.

‘கட்டிய எல்லா வரிகளுக்கும் கிரெடிட் எடுத்திருக்கிறாய் அல்லவா, விலையைக் குறை!’ என்று நீங்களும் நானும் சொல்லவேண்டியது இல்லை. அதை மார்க்கெட் பார்த்துக்கொள்ளும். லேப்டாப், செல்போன் இதெல்லாம் ரெண்டு வருஷம் முன்னாடி என்ன விலை, இன்னைக்கு என்ன விலை? இந்த விலையை மார்க்கெட்தானே குறைச்சுது!

சந்தைப் போட்டியில் சரக்கைத் தள்ளணும்னா, விலையை குறைச்சுத்தான் ஆகணும். அதற்காக நஷ்டத்துக்கு யாரும் வியாபாரம் பண்ண முடியாது. வாங்குகிற பொருட்களில் இருக்கிற வரிகளை எல்லாம் கிரெடிட் எடுத்துக்கொண்டு மீதிக்கு வரி கட்டினால் போதும் என்றால், அடக்க விலை குறையுமா, குறையாதா? வாய்ப்பு கொடுத்தால் அதைப் பயன்படுத்தாமல் இருக்க எந்த வியாபாரியும் முட்டாள் இல்லை. லோகாயத முட்டாள்கள் இலக்கிய வாதியாக இருக்கலாம்; ஒருநாளும் வியாபாரியாக இருக்க முடியாது!

- கட்டுரையாளர்: மத்திய வருவாய் புலனாய்வுத் துறையில் மூத்த நுண்ணறிவு அதிகாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்