க்யூஐபி மூலம் ரூ.7,000 கோடி திரட்டியது எஸ்பிஐ

By செய்திப்பிரிவு

பாரத ஸ்டேட் வங்கி பங்கு விற்பனை மூலம் ரூ. 7 ஆயிரம் கோடியைத் திரட்டியுள்ளது. தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் (க்யூஐபி) முறையில் பெருமளவிலான பங்குகளை எல்ஐசிக்கு ஒதுக்கி இத்தொகையை எஸ்பிஐ திரட்டியுள்ளது.

இதன் மூலம் இந்த நிதி ஆண்டுக்குத் தேவையான மூலதனத்தை வங்கி திரட்டி யுள்ளது. ஏற்கெனவே ரூ. 9,500 கோடியை திரட்ட வங்கி இயக்குநர் குழுமம் ஒப்புதல் அளித்திருந்தது. இப்போது ரூ. 7 ஆயிரம் கோடி திரட்டியிருந்தாலும் மேலும் தேவைப்படும் நிதியைத் திரட்ட வங்கிக்கு பல்வேறு வழிகள் உள்ளன.

வங்கிப் பங்குகளை மிக அதிக விலைக்கு எல்ஐசி வாங்கியுள்ளது. தகுதி வாய்ந்த நிறுவனங் களுக்கு பங்குகளை ஒதுக்குவது தொடர்பான அறிவிப்பு புதன்கிழமை வெளியானது. ஒரே நாளில் எல்ஐசி அதிகபட்ச பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது. மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை எஸ்பிஐ பங்கு விலைகள் 2.5 சதவீதம் சரிந்து ஒரு பங்கு ரூ. 1,519 என்ற விலைக்கு விற்பனையானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

6 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்