இந்திய மக்களின் சேமிப்பு குறைந்திருப்பதாக அசோசெம் அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது. அதிகரிக்கும் பணவீக்கம், எரிபொருள் உயர்வு, கல்விக்கான கட்டண உயர்வு, இன்ஷூரன்ஸ் பிரீமிய தொகை உயர்வு போன்ற காரணங்களால் இந்திய மக்களின் சேமிப்பு குறைந்து வருவதாக இந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.
ஏழை மக்களுக்கு முக்கியமான செலவுகள் எட்டாத இடத்தில் இருப்பதாகவும், நடுத்தர மக்களுக்கு இந்த செலவுகள் காரணமாக சேமிப்பு குறைந்து வருவதாகவும் அசோசெம் அமைப்பின் பொதுச்செயலாளர் டி.எஸ்.ராவத் தெரிவித்தார்.
இந்த அமைப்பு நடத்திய ஆய்வில் வங்கி சேமிப்பு, பங்கு முதலீடு, கடன் பத்திரங்களில் முதலீடு உள்ளிட்ட அனைத்து விதமான வழிகளில் இருந்தும் சேமிப்பு குறைந்துக்கொண்டே இருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறது. அதே சமயத்தில் பணவீக்கம் காரணமாக நிறுவனங்களும் கடும் சுமையில் இருப்பதாக தெரிகிறது. நிறுவனங்களின் மூலப்பொருட்களின் செலவு அதிகரிப்பதோடு, ஊழியர்களுக்கும் சம்பளத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனங்கள் இருக்கிறது.
இந்த ஆய்வில் கலந்துக்கொண்ட மக்களில் 82 சதவிகிதம் மக்கள், கடந்த வருட சம்பள உயர்வு பணவீக்கத்தை ஈடு செய்யும் அளவில் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். அதனால் எங்கெல்லாம் செலவுகளை குறைக்க முடியுமோ அங்கெல்லாம் செலவுகளை குறைத்து வருகிறார்கள். விலை குறைந்த பொருட்களை வாங்குவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
சர்வேயில் கலந்து கொண்ட நான்கில் ஒருவர், வருமானத்தை அதிகரிக்க வேலை மாறுவதற்கான வாய்ப்பையோ அல்லது ஓவர்டைம் உள்ளிட்ட எதாவது செய்யலாமா என்று யோசிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago