சித்ரா ராமகிருஷ்ணா - இவரைத் தெரியுமா

By செய்திப்பிரிவு

$ தேசிய பங்குச் சந்தையின் தலைவர் மற்றும் தலமைச் செயல் அதிகாரி. பங்குச் சந்தையின் முதல் பெண் தலைவர்.

$ பிரிட்டனின் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் மற்றும் நிர்வாகவியல் கல்வி மையத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். இந்திய சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் மையத்தில் உறுப்பினராக இருப்பவர்.

$ 2008-ம் ஆண்டு ரகுராம் ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட நிதிச் சீர்திருத்த குழுவில் இடம்பெற்றவர்.

$ 1985-ம் ஆண்டு ஐடிபிஐ வங்கியின் நிதிப் பிரிவில் பணிக்குச் சேர்ந்தார். பின்னர் செபி-யில் சிறிது காலம் பணியாற்றிய இவர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐடிபிஐ-க்குத் திரும்பினார்.

$ 1992-ம் ஆண்டில் ஹர்ஷத் மேத்தாவால் மும்பை பங்குச் சந்தையின் செயல்பாடு கடுமையான விமர்சனத்துக்குள்ளான நிலையில் தேசிய பங்குச் சந்தை உருவாக்க முக்கியக் காரணமாக அமைந்தவர்களில் இவரும் ஒருவர்.

$ மும்பை பங்குச் சந்தையில் தரகர்கள் பங்குகளை கூவி விற்பனை செய்த காலத்தில், கம்ப்யூட்டர் மூலமான பரிவர்த்தனையை ஏற்படுத்தி பங்குச் சந்தை மீதான நம்பகத்தன்மையை ஏற்படுத்தியவர்.

$ தொழில்முறை நிர்வாகிகளால் மிகச் சிறப்பான பங்குச் சந்தையை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர்.

$ கடந்த ஆண்டு பார்ச்சூன் 500 இதழில் மிகுந்த செல்வாக்கு படைத்தவர்கள் பட்டியலில் 17-வது இடத்திலிருந்தவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

5 hours ago

வணிகம்

5 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

மேலும்