பிறந்தது படித்தது எல்லாம் கோவையில். அப்பா மட்டும் தங்கமூலாம் பூசும் கவரிங் (பிளேட்டிங்) தொழிலில் ஈடுபட்டு வந்தார். அப்போதே ஏன் அசல் தங்கநகையை நாம் செய்யக்கூடாது? என்று அந்த சிறுவனுக்கு ஆர்வம்.
பள்ளிப் பருவத்திலேயே அப்படித்தான் ‘எமரால்டு’ என்ற வார்த்தை ஈர்த்தது. அதுதான் தான் தொடங்க இருக்கும் நகைத் தொழிற்சாலைக்கான பெயர் என்று முடிவு செய்து வெளியே சொன்னபோது பலரும் சிரித்தார்கள். படித்தது பிஎஸ்சி கணிதம்தான் என்றாலும் கூட மனசெல்லாம் தொடர்ந்து தங்கக்கனவு. 32 ஆண்டுகளுக்கு முன்பு வடநாட்டில் இரண்டு தங்க நகை வியாபாரிகளிடம் ஆர்டர் பெற்று ஆரம்பித்த தொழில் இன்றைக்கு 100க்கும் மேற்பட்ட டீலர்களை கொண்டும், 3 லட்சம் எக்ஸ்க் ளூசிவ் டிசைன்களில் நகைகளையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி.
இதன் நிர்வாக இயக்குநர் கே.ஸ்ரீனிவாசன். ஒரு மாத காலத்துக்கு கோவையில் நெக்லஸ் மேளா ஒன்றை ஆரம்பித்துள்ளார். அவரிடம் தொழில் ரீதியாக அளாவளாவியதிலிருந்து...
‘யுஜி டிகிரி முடித்ததுமே கோவை யில் உள்ள நகைக்கடை ஒன்றில் ரூ.150 மாத சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் அந்த தொழிலில் முழுமையான ஈடுபாடு காட்டினேன். வெளியூர் நகை வியாபாரிகள் எல்லாம் என்னிடம் வந்து வர்த்தகம் பேசும் அளவு வளர்ந்த வேளையில் அகமதாபாத் வியாபாரி ஒருவர் மொழி புரியாமல் குறிப்பிட்ட கம்பெனிக்கு வழிகேட்டுக் கொண்டிருந்தார்.
அவருக்கு வழிகாட்டியதுடன், ‘நானும் ஜூவல்லரி கடையில்தான் பணியில் இருக்கிறேன். புதுப்புது நகை டிசைன்கள் வடிவமைக்கும் நகைப்பட்டறையாளர்களிடம் தங்கம் கொடுத்து நகைகள் செய்து கடையில் சேர்ப்பதை பற்றி தெரிவித்தேன். என் பேச்சு. செயல்பாடு அந்த வடநாட்டு வியாபாரிக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ‘அகமதாபாத் வந்தால் என்னால் உங்களுக்கு உதவ முடியும்!’ என்று வாஞ்சையோடு அழைத்தார்.
அதை வீட்டில் தெரிவித்து, அவரை நம்பி தொழிலில் இறங்குவதாக சொல்ல கடுமையான எதிர்ப்பு. ‘வடநாட்டுக்காரர் ஏமாற்றிவிடலாம். சிக்கல் வரலாம்!’ என்றெல்லாம் தொடர் அட்வைஸ்கள். அதையும் மீறி அகமதாபாத் சென்றேன். அந்த வியாபாரி எதிர்பார்த்ததை விடவும் மிக நல்லவராக இருந்தார். அவர் கொடுத்த தங்கத்தை கொண்டு முதலில் அவர் கேட்டுக் கொண்டபடி நகைகளை செய்து தந்தேன்.
அதன் செய்நேர்த்தி, துல்லியம் தவிர எனது நேர்மையும் பிடித்துப்போக இன்னொரு நகை வியாபாரியை அறிமுகப்படுத்தி அவருக்கும் நகை செய்ய ஆர்டர் தந்தார். ஒரு கட்டத்தில், ‘நீ என் பிள்ளை மாதிரி. எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் அட்வான்ஸ் இல்லாமல் எடுத்துட்டுப் போ!’ என்று சொல்லும் அளவு வளர்ந்தது. அவ ருக்கு ஏற்றமாதிரி திருப்தியாக செய்ய செய்ய எனக்கு இந்த தொழிலில் முதலீட் டிற்கான அவசியம் இல்லாமல் போனது.
அவர் அறிமுகப்படுத்திய வியா பாரிகள், என் தொழில் நேர்த்தி, நேர்மையை முன்வைத்து மற்ற வியா பாரிகளிடமும் தெரிவிக்க, அவர்கள் எல்லாம் என்னிடமே நகை தயாரிக்க கொடுத்தார்கள். அவர்களிடம் தங் கத்தை வாங்கி வந்து கோவையில் பட்டறைகளில் கொடுத்து நகைகள் செய்தேன். அதை 36 மணி நேரம் நானே நவஜீவன் எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்து நேரிடையாக வியாபாரிகளுக்கு அளித்தும் வந்தேன்.
ஒரு கட்டத்தில் ஏன் நாமே வித்தி யாசமான டிசைன்களில் நகைகள் செய்யக்கூடாது என்ற கேள்வி எழுந்தது. அதற்காக 1990ல் காஸ்டிங் பாக்டரி ஆரம்பித்தேன். அந்த மெஷின் மேக் நகைகளுக்கு நல்ல வரவேற்பு வந்தது. உலகத்தில் நடக்கும் பல்வேறு கண்காட்சிகளுக்கும் சென்று புதுப்புது டிசைன்களை பார்த்து, அதிலிருந்து அடுத்த லெவலுக்கான டிசைன்களை- அதிலும் இந்திய டிசைன்களுக்கு தகுந்த மாதிரி வடிவமைத்து தர ஆரம்பித்தேன். சொந்த டிசைன் என்பதற்கு வானமே எல்லை என்பது போல் அது விரிந்தது.
‘எமரால்டு!’ நகை பாக்டரியிலிருந்து ‘ஜூவல் ஒன்!’ நகை விற்பனைக்கு வந்தது எப்படி?
அதற்கு முன்னோடி‘ரேமண்ட்ஸ்!’. அவங்க மொத்த வியாபாரத்தோட, எக்ஸ்குளூசிவ் ஷோ ரூம் வைக்கிறாங்க. அதை நாம் ஏன் செய்யக்கூடாது. நாம் மற்றவர்களுக்கு ‘பிராண்டா’ மட்டும் ஏன் திரைக்குப் பின்னாடியே இருக்கணும்? அது எத்தனை நாளைக்கு? அதுதான் ஜூவல் ஒன் 3 வருஷத்துக்கு முன்னாடி உருவாக காரணம். அது தமிழகத்தில் மட்டும் தற்சமயம் 14 கிளைகளாக வளர்ந்திருக்கு. அதில் முழுக்க வித்தி யாசமான டிசைன்களையே வைக்கி றோம். இன்றைக்கு உலகம் முழுக்க, இந்திய நகைகளின் வெரைட்டியை விரும்பும் டீலர்கள் 100 ஐ தாண்டி வெகுவேகமாக செல்ல இந்த ஷோரூமும் ஒரு காரணம்.
சாதாரண குடும்பத்திலிருந்து சராசரியான ஒரு கல்லூரியில், நகைத்தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத படிப்பு படித்து இந்த அளவுக்கு வளர்ந்துள்ளதை உங்கள் கல்லூரி நண்பர்கள் பார்த்து வியப்பதில்லையா?
அவர்களை இப்போதும் நட்பு வட்டாரத்திலேயே வைத்துள்ளேன். எந்த இடத்திலும் என் வியாபார வளர்ச்சி குறித்து பேசியதேயில்லை. என் சக வியாபாரிகளுக்கு மட்டுமே என் தொழில்வளர்ச்சி தெரியும்.
உங்களின் வெற்றிக்கு காரணம்?
உண்மையாக இருப்பது, இருப்பதை இருக்கிற வரை செய்வது, தரத்தில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாதது, அடுத்த டிசைன் என்ன என்பதை மற்றவர்களுக்கு முன்பே யோசித்து செயல்படுத்துவது.
உங்களின் போட்டியாளர்கள் குறித்து...
எனக்கு முன்னும் பின்னும் உள்ள இருவர் மட்டுமே போட்டியாளர் என்று நான் கருதுவதில்லை. 100 கிராம் தங்கம் பெற்று புதிதாக இண்டஸ்ட்ரிக்கு நகை செய்ய வருபவர்தான் பிரதான போட்டியாளராக பார்க்கிறேன். அவர் செய்வதை விட சிறப்பா பண்ணணும். அதை கடமையா நினைச்சுப் பண்ண ணும். இல்லைன்னா இந்த தொழிலில் நிற்க முடியாது.
தங்கம் விலை உலக அளவில் ஏற்ற இறக்கத்தை சந்திக்கிறது. இந்த நிலைமையில் வர்த்தகம் குறித்த கவலை உங்களை போன்றவர்களுக்கு இயல்பாக இருக்குமே?
எங்களுடைய வளமே டிசைன்களில் தான் இருக்கு. அதில் என் சக்திக்கு மீறிப்போய் ஆர்டர் இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்வேன். அதனால் இத்தனை வருட தொழிலில் இந்த ஆண்டு, குறிப்பாக ஓரிரு மாதங்களில் சின்ன சரிவு தெரிகிறது. ஆனால் அது நஷ்டப்படும் அளவு கவலைக்குரியதாக இல்லை. என்றாலும் அரசு புதிய சட்ட திருத்தங்கள் கொண்டு வருது. அது இந்த தொழிலில் முன்னேற்றமான மாற்றங்களை நிச்சயம் உருவாக்கும்.
நகை வடிவமைப்பை பட்டறை யிலிருந்து இயந்திரத்திற்கு கொண்டு வந்ததால் தங்க நகை தரம் குறைந்தது, பட்டறை தொழி லாளர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்தது, கிளஸ்டர் வேண்டும் என்றெல்லாம் இந்த தொழில்சார்ந்த வர்களிடம் குரல் ஒலிக்கிறதே?
அது வெறும் கற்பனை. தொழிலுக் கான அறியாமை. குறைந்த எடை, பார்க்க பெரிசா இருக்கணும் என்பது கஸ்டமர் சாய்ஸ். அதை மிஷின் மேக்கிங் மூலம் நன்றாகவே தரமுடி கிறது. அதேசமயம் ஹேண்ட் மேக்கிங் என்பது மிஷினில் வரவே வராது. அது கைவினைப்பொருள் மாதிரி. அதற்கான மரியாதையும், எதிர்பார்ப்பும் என்றும் அழியாதது.
இந்த தொழிலில் உங்களின் அடுத்த நிலை?
நிறைய இருக்கு. புதுவித வைர நகைகள், பிளாட்டின நகைகள் எல்லா ஷோரூம்லயும் வச்சுட்டு வர்றோம். டீன் ஏஜ் பிரிவினர் விரும்பும் ஜேஓ சப் பிராண்ட் நகைகளை அறிமுகப்படுத்தி 6 மாசம் ஆகிறது. 40 ஆயிரம் சதுர அடி கட்டிடத்தில் 3 லட்சம் டிசைன்களை கொண்ட நிரந்தர கண்காட்சியை எங்கள் கஸ்டமர்களுக்கு என்றே நிறுவ உள்ளோம்.
velayuthan.kasu@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
11 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago