சென்செக்ஸ் 245 புள்ளிகளுக்கு மேல் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தக துவக்கத்தின் போது, சென்செக்ஸ் 245 புள்ளிகள் உயர்ந்து 20,780.06 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 75.25 புள்ளிகள் உயர்ந்து 6,167.10 புள்ளிகளிலும் வர்த்தகமாகி இருந்தன.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி அட்டவணை இன்று வெளியாக உள்ளது. இதன் மீதான எதிர்பார்ப்பும், ஆசிய சந்தைகளில், குறிப்பாக ஹாங்காங்கின் ஹாங்சென் குறியீடு 0.35% வரையிலும், ஜப்பானின் நிகேகி 0.07%-ம் அதிகரித்துள்ளதால், பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் காணப்படுவதாலும் பங்குவர்த்தகம் ஏறுமுகத்தில் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே போல்,அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்வில் இருந்தது. காலை வர்த்தக துவக்கத்தின் போது, இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் அதிகரித்து 62.27 ஆக இருந்தது. நேற்று வர்த்தக முடிவின் போது, எண்ணெய் இறக்குமதியாளர்கள் மத்தியில் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துக் காணப்பட்டதால், ரூபாய் மதிப்பு 27 காசுகள் குறைந்து 62.41 என்ற நிலையில் இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE