மியான்மரில் எண்ணெய்க் கிணறு: ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா போட்டி

By செய்திப்பிரிவு

மியான்மரில் எண்ணெய், எரிவாயு வயல் கண்டறிவதற்கான டெண்டரில் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி விதேஷ் நிறுவனம் போட்டியிடுகிறது. தனியார் துறையில் ரிலையன்ஸ் நிறுவனமும் டெண்டர் தாக்கல் செய்துள்ளது.

இவ்விரு நிறுவனங்கள் தவிர, ஆயில் இந்தியா லிமிடெட், கெயில் இந்தியா லிமிடெட் ஆகியனவும் டெண்டர் அனுப்பியுள்ளன. இவ்விரு நிறுவனங்களும் அந்நாட்டைச் சேர்ந்த உள்ளூர் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து டெண்டர் தாக்கல் செய்துள்ளன.

கெய்ர்ன் இந்தியா நிறுவனம் ஏற்கெனவே முதல் கட்ட தேர்வு பெற்ற 61 நிறுவனங்களில் ஒன்றாகும். இது கடல் மற்றும் நிலப் பகுதியில் எண்ணெய், எரிவாயு கண்டறியும் பணிக்கு போட்டியிட்டுள்ளது.

டெண்டர் தேதி கடந்த வாரத்துடன் முடிந்துவிட்டது. இருப்பினும் எந்தப் பகுதி எண்ணெய் கிணறு, எண்ணெய் வயலுக்கு எந்த நிறுவனம் டெண்டர் அனுப்பியுள்ளது என்பதை அந்நாட்டு பெட்ரோலிய அமைச்சகம் தெரிவிக்கவில்லை.

கெயில் நிறுவனமும், கிரிஸ் எனர்ஜியும் இணைந்து 3 எண்ணெய் வயல்களுக்கு டெண்டர் அனுப்பியுள்ளன. ஆயில் இந்தியா நிறுவனமும் மெர்கேடர் நிறுவனம் மற்றும் மாக்ஸ் எனர்ஜியுடன் இணைந்து 3 ஆழ்கடல் எண்ணெய் வளம் கண்டறிய போட்டி போட்டுள்ளது.

சர்வதேச நிறுவனமான ஷெல், ஜப்பானின் மிட்ஸுயி இணைந்து 3 எண்ணெய் வயல்களுக்கும், செவ்ரான், எக்ஸான் மொபில் 2 எண்ணெய் வயல்களுக்கும், பிரான்ஸின் டோட்டல், மலேசியாவின் பெட்ரோனாஸ் இணைந்து 2 வயல்களுக்கும் டெண்டர் அனுப்பியுள்ளன.

நார்வேயைச் சேர்ந்த ஸ்டாட் ஆயில் நிறுவனம் கோன்கோ பிலிப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 2 எண்ணெய் வயல்களுக்கும், பிஜி குழுமமும், உட்சைட் எனர்ஜி குழுமமும் இணைந்து தலா 4 எண்ணெய் வயல்களுக்கும் விண்ணப்பித்துள்ளன. ஸ்பெயி னின் ரெப்சோல் நிறுவனம் 3 எண்ணெய் வயல்களுக்கு போட்டியிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

11 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்