இன்ஃபோசிஸ் செப்டம்பர் காலாண்டு லாபம் 1.6% உயர்வு

By செய்திப்பிரிவு

இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ்ஸின் இரண்டாம் காலாண்டு லாபம் 1.6 சதவீதம் உயர்ந்துள்ளது.

செப்டம்பர் மாதத்துடன் முடி வடைந்த காலாண்டில் நிறுவன லாபம் ரூ. 2,407 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 2,396 கோடி. நடப்பு நிதி ஆண்டில் 9 சதவீதம் முதல் 10 சதவீத வளர்ச்சியை எதிர் பார்ப்பதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. முன்னர் 6 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது குறிப் பிடத்தக்கது.

முதலீட்டாளர்களுக்கு 200 சதவீதம் இடைக்கால டிவிடெண்ட் அளிக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது ரூ. 5 முக மதிப்பு கொண்ட பங்குகளை ஆறுமாதமாக வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்குக்கு ரூ. 20 ஈவுத் தொகை கிடைக்கும்.

அமெரிக்காவில் தாற்காலிக விசா மூலம் பணியாளர்களை அனுப்பி வருவதாக அமெரிக்க நிர்வாகம் இன்ஃபோசிஸ்ஸை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதற்கென ரூ. 219 கோடி ஒதுக்கியுள்ளதாக நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.

நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி மீண்டும் தலைமைப் பொறுப் புக்குத் திரும்பிய பிறகு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நிறுவனம் குறிப் பிடத்தக்க லாபத்தை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனப் பங்குக ளின் விலை அதிகபட்சமாக 7.54 சதவீதம் உயர்ந்து ரூ. 3,360-யை தொட்டது. இது கடந்த 52 வாரங்க ளில் இந்நிறுவனப் பங்கு எட்டாத அதிகபட்ச விலையாகும். வர்த்த கத்தின் முடிவில் 3273 ரூபாயில் முடிவடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்