ஹெச்எஸ்பிசி வங்கிக்கு பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடிகையும் பாடகியுமான சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் வங்கி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வங்கியில் தான் போட்டிருந்த பணத்தில் வங்கி நிர்வாகம் தில்லுமுல்லு செய்து விட்டதாக கடந்த மார்ச் 15-ம் தேதி சுசித்ரா புகார் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக செபி அதிகாரிகள் ஆரம்பகட்ட விசாரணை நடத்தினர். இதையடுத்து ஹெச்எஸ்பிசி-க்கு புதிதாக விளக்கம் கோரும் நோட்டீஸை செபி அனுப்பியுள்ளது. அதில் சுசித்ரா அளித்த புகாரின் அடிப்படையில் வங்கி நிர்வாகம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஹெச்எஸ்பிசி செய்தித் தொடர்பாளரைத் தொடர்பு கொண்டபோது, அவர் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.
செபிக்கு சுசித்ரா அளித்த புகார் மனுவை விசாரித்ததில் அவரது நிதியில் தில்லுமுல்லு நடைபெற்றிருப்பதும் நிதி முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பதற்குமான ஆரம்ப கட்ட ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்தே விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
7 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago