Bond என்பது ஒருவித கடன் பத்திரம். இதை வெளியிடுபவருக்கு கடன், வாங்குபவருக்கு அது முதலீடு. ஒரு தொழில் நிறுவனம், பங்கு விற்பனை மூலம் முதலீடு திரட்டுவதுபோல், Bond விற்பனை மூலமும் தொழிலுக்கான முதலீட்டை திரட்ட முடியும். ஒரு நிறுவனத்தின் பங்குதாரர்களை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவேண்டும், அதே நேரத்தில் தொழிலை விரிவுபடுத்த தேவைப்படும், கூடுதல் முதலீட்டிற்கு Bond வெளியிடுவது உண்டு. முதலில் வாங்கப்பட்ட பாண்டுகளை பின்பு பங்கு (share) பத்திரமாக மாற்றும் வசதியும் உண்டு. இத்தகைய பாண்டுகளுக்கு convertible bond (மாற்றத்தக்க பத்திரங்கள்) என்று பெயர்.
bond என்பது நீண்டகால கடன் பத்திரமாகும். அதனை எந்த நேரத்திலும் வாங்கவும் விற்கவும் முடியும் என்பதால், முதலீட்டாளர்கள் அதனை ஒரு குறுகியக் கால முதலீடாக கருதலாம்.
அரசும் குறுகிய கால, நீண்ட கால அடிப்படையில் பாண்டுகளை வெளியிடுவது உண்டு. பொதுவாக முதலீட்டுச் செலவுக்கு அரசு பாண்ட் மூலமாக நிதி திரட்டுவது நல்லது என்று கூறுபவர்களும் உண்டு.
பாண்ட், ஒரு குறிப்பிட்ட ஆண்டு வட்டி விகிதம் தருவதாக இருக்கும், அந்த வட்டி விகிதத்திற்கு coupon என்று பெயர்.
தொழில் நிறுவனங்கள் வெளியிடும் பாண்ட்க்கு corporate bond என்றும், அரசு வெளியிடும் பாண்டுக்கு government அல்லது treasury bond என்றும் பெயர். இவை அல்லாமல், municipality, மாநில அரசு, பொதுத் துறை நிறுவனங்களும் பாண்ட் வெளியிடும்.
அரசு வெளியிடும் பாண்டுகளை வாங்குவதன் மூலம் ஒரு நாட்டின் மத்திய வங்கி பண அளிப்பை அதிகரித்து, அரசின் பாண்டுகளை விற்பது மூலம் பண அளிப்பை குறைக்க முடியும். உதாரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி அரசின் பாண்டுகளை வாங்கும்போது அதற்கு இணையாக பணத்தை அச்சிட்டு வெளியிடும். இதனால், பண அளிப்பு அதிகரிக்கும். மாறாக, இந்திய அரசின் பாண்டுகளை விற்கும்போது, அதற்கு நிகராக புழக்கத்தில் உள்ள பணத்தை RBI வாங்கிக்கொள்ளும், அதனால், நாட்டில் பண அளிப்பு குறையும்.
பெரிய நிதி நிறுவனங்கள் மட்டுமே பாண்டு வியாபாரம் செய்யும். இங்கு ஒவ்வொரு பரிவர்த்தனையும் பல கோடி ரூபாய்களுக்கு நடைபெறுவதால், தனி நபர்கள் யாரும் இச்சந்தையில் வியாபாரம் செய்வதில்லை. வங்கிகள், mutual fund நிறுவனங்கள், மத்திய வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், ஓய்வூதிய நிறுவனங்கள் போன்றவை இச்சந்தையில் வியாபாரம் செய்யும்.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago