தங்கத்தின் விலை ஒரே நாளில் கிராம் 71 ரூபாய் உயர்வு

நடப்பாண்டில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை நேற்று உயர்ந்தது. நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு கிராம் 71 ரூபாய் வரை உயர்ந்தது. 10 கிராம் தங்கத்தின் விலை 715 ரூபாய் உயர்ந்து 26,850 ரூபாயாக இருந்தது.

சர்வதேச சூழ்நிலை மற்றும் பண்டிகைகால சீசன் தொடங்கி யுள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது. மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயும் சரிந்துள்ளதால் தங்கத் தின் இறக்குமதி விலையும் அதிகரித்திருக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இப்போதைக்கு ஒரு டாலர் 61.72 ரூபாயாக இருக்கிறது.

சரிந்து வந்த வெள்ளியின் விலையும் நேற்று உயர்ந்தது. ஒரு கிலோ வெள்ளி விலை 2,100 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 36,700 ரூபாயாக இருக்கிறது.

சர்வதேச அளவிலும் தங்கத்தின் விலை கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஒரு அவுன்ஸ் தங்கம் 40 டாலர் அதிகரித்து 1,193 டாலருக்கு சர்வதேச சந்தையில் விற்பனையானது. கடந்த அக்டோபர் 31-ம் தேதிக்கு பிறகு இந்த அளவுக்கு உயர்வது இப்போதுதான்.

வெள்ளியின் விலையும் ஒரு அவுன்ஸ் 4.4 சதவீதம் உயர்ந்து 16.31 டாலராக இருக்கிறது. கடந்த பிப்ரவரிக்கு பிறகு இப்போதுதான் இந்த விலையை தொடுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக 10 கிராம் தங்கம் 315 ரூபாய் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

வணிகம்

4 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்