நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பற்றாக்குறை 4.8 சதவீத அளவுக்குக் குறையும் என்று நிதித்துறைச் செயலர் சுமித் போஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
சேவை வரியில் அரசு அளித்த சலுகை திட்டம் மிகச் சிறந்த பலனை அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நடப்பு நிதி ஆண்டில் பற்றாக்குறை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாக இருக்கும் என்றார்.
கடந்த நிதி ஆண்டில் (2012-13) பற்றாக்குறை 4.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சேவை வரியில் அரசு அறிவித்த சலுகை திட்டம் மூலம் ரூ. 7,700 கோடி வசூலானதாக அவர் குறிப்பிட்டார். தாமாக முன்வந்து வரி செலுத்தும் (விசிஇஎஸ்) திட்டம் கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி சேவை வரியை செலுத்தாதவர்கள் எவ்வித அபராதமும் இன்றி டிசம்பர் 31 வரை செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதன்படி அரசுக்கு ரூ. 7,700 கோடி வசூலாகியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் சேவை வரி மூலம் ரூ. 1.80 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேரடி வரி வருவாய் மூலம் ரூ. 6.68 லட்சம் கோடியும், மறைமுக வரி வருவாய் மூலம் ரூ. 5.65 லட்சம் கோடி திரட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கம் இறக்குமதி செய்வதில் உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா என்று கேட்டதற்கு, நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைப்பதுதான் நிதி அமைச்சகத்துக்கு முன்னுரி மையாக உள்ளது என்று குறிப் பிட்டார்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் 162 டன்னாக இருந்த தங்க இறக்குமதி நவம்பரில் 19.3 டன்னாகக் குறைந்தது. இறக்குமதி மீது வரி விதிப்பை மூன்று முறை உயர்த்தியது மத்திய அரசு.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
வணிகம்
4 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago