அனலிஸ்ட்களுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுப்போம்: ப.சிதம்பரம்
அதேபோல இப்போதும் நடப்புகணக்கு பற்றாக்குறையை 70 பில்லியன் டாலருக்குள் குறைப்போம் என்று சொல்லி இருக்கிறோம். ஆனாலும் பலரும் முடியாது என்கிற ரீதியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை அதிர்ச்சி அளிப்போம் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் கிளையைத் திறந்துவைத்து பேசியபோது மத்திய நிதி அமைச்சர் சொன்னார்.
மேலும், பொருளாதார மந்த நிலை நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் வேகமடையும் என்றும் அடுத்த இரண்டு வருடங்களில் வளர்ச்சி மிகவேகமாக அதிகரிக்கும் என்றார்.
சென்ற நிதி ஆண்டை விட நடப்பு நிதி ஆண்டு அதிக வளர்ச்சி இருக்கும் என்றும், 2014-15-ம் ஆண்டில் 6 முதல் 7 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்றும் 2015-16ம் ஆண்டில் 8 சதவிகித வளர்ச்சிக்குத் திரும்புவோம்.
இந்திய மக்களின் சேமிப்பு குறித்து பேசியபோது, மக்கள் சேமிப்பது நமக்கு கிடைத்த அதிர்ஷ்டம். மோசமான சூழ்நிலையில் கூட இந்தியாவின் சேமிப்பு 30 சதவிகிதத்துக்கு (ஜி.டி.பி.யில்) கீழே குறையவில்லை. இந்த சேமிப்பை நாம் சரியான முதலீடாக மாற்றும்போது மந்த நிலையில் இருந்து நாம் மேலே வருவோம்.
மேலும், சிறந்த பொருளாதார வல்லுனர்கள், ஆலோசகர்கள், நிர்வாகிகள் இந்தியாவில் இருக்கிறார்கள். இதை வைத்துதான் நிலைமை மாறும். என்னை நம்புங்கள் என்றார் சிதம்பரம்.