சர்வதேச சூழ்நிலைகளை பொறுத்தே இந்தியாவின் வளர்ச்சி

By செய்திப்பிரிவு

இந்தியாவின் வளர்ச்சி சர்வதேச பொருளாதார சூழ்நிலைகளை பொறுத்துதான் இருக்குமே தவிர புதுடெல்லியில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்பதைப் பொறுத்து கிடையாது என்று பேங்க் ஆஃப் அமெரிக்கா - மெரில் லிஞ்ச் தெரிவித்திருக்கிறது.

கடந்த வாரம் சிங்கப்பூரில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் 20 முதலீட்டாளர்களை சந்தித் தாகவும் அவர்கள் தேர்தலுக்கு முன்பு தங்களுடைய கரன்சி பொசிஷன்கள் முடித்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருக் கிறார்கள்.

பேங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைமை பொருளாதார அறிஞர் ஐ. சென் குப்தா கூறும் போது ஈக்விட்டி முதலீட்டாளர்கள் தேர்தலுக்கு பிறகு நிலையான அரசு அமையும் என்பதை மையமாக வைத்து முடிவெடுக்கிறார்கள். ஆனால் கரன்ஸி முதலீட்டாளர்கள் தேர்தலுக்கு முன்பாக தங்களுடைய பொசிஷன்களை முடித்துக்கொள்ள போவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த இரு தேர்தல் முடிவுகளின் வைத்து பார்க்கும்போது புரியும். 2004-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வந்தபோது பங்குச்சந்தைகள் 15.9 சதவீதம் சரிந்தது, இத்தனைக்கும் அதன் பிறகு வளர்ச்சி இருந்தது. மாறாக 2009-ம் ஆண்டு 15 சதவீதம் பங்குச்சந்தைகள் உயர்ந்தன. ஆனால் அதன்பிறகு வளர்ச்சி சரிந்தது என்றார். இப்போதைக்கு முதலீட்டா ளர்களுக்கு சோதனைக் காலம். தேர்தல், எல் நைனோ, அமெரிக்க டாலர் ஆகியவை முதலீட்டாளர்களுக்குச் சவாலாக இருக்கும்.

கருத்துகணிப்புகள் பாஜக ஆட்சி அமைக்கும் என்று சொல் கிறது. ஆனால் 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் கருத்துகணிப்புகள் தவறாகவே போயிருக்கின்றன. பங்குச்சந்தையிலும் இது தவறா கவே எதிரொலித்தது. இதற்கு காரணம் சர்வதேச சூழ்நிலைகளை சந்தை புரிந்துக்கொள்ளாததுதான் என்று குப்தா தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சிக்கும் பங்குச்சந்தைகளுக்கு வேண்டுமானல் தேவையானதாக இருக்க லாமே தவிர, அதற்கும் தேர்த லுக்கும் சம்பந்தம் இல்லை.

சர்வதேச அளவில் வளர்ச்சி ஏற்படும்போது பிரிக் நாடுகளில் வளர்ச்சி ஏற்படுகிறது. அதேபோல சர்வதே அளவில் சரிவு ஏற்படும் போது இங்கேயும் (யூ.பி.ஏ. - 2) சரிவு ஏற்படுகிறது.

2015-ம் ஆண்டு வரை இந்த நிலை மாறாது. அப்போதுதான் அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும்.

மேலும் நிலையான அரசு அமைந்தாலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 55 ரூபாய்க்கு செல்லும் என்று கருத்து சொல்ல முடியாது. ரூபாயின் ஸ்திரத் தன்மைக்கும் தேர்தலுக்கு சம்பந்தம் இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

மேலும்