புது வருடத்தின் முதல் நாளில் பங்குச்சந்தையில் மந்த நிலை

By செய்திப்பிரிவு

வருடத்தின் தொடக்க நாளான புதன் கிழமை இந்திய பங்கு சந்தைகளில் மந்தமான வர்த்தகம் நடைபெற்றது. ஆங்கில புத்தாண்டை ஒட்டி முக்கியமான சர்வதேச சந்தைகளுக்கு புதன்கிழமை விடுமுறை என்பதால், அன்னிய முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைவாக இருந்தது. இதன் வர்த்தகத்தின் அளவுகளும் குறைவாகவே இருந்தது.

வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 30 புள்ளிகள் சரிந்து 21140 என்ற புள்ளியில் முடிவடைந்தது. அதே போல தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 2 புள்ளிகள் சரிந்து 6301 என்ற புள்ளியில் முடிவடைந்தது.

முக்கிய குறியீடுகள் சரிந்தாலும், பி.எஸ்.இ. மிட்கேப் குறியீடு 0.47 சதவீதமும், பி.எஸ்.இ. ஸ்மால் கேப் குறியீடு 1.5 சதவீதமும் உயர்ந்தன. எஃப்.எம்.சி.ஜி., ஹெல்த்கேர் மற்றும் டெலிகாம் ஆகிய துறை பங்குகளில் சிறிதளவு வாங்கும் போக்கு இருந்தது. ஆனால் வங்கி, டெக்னாலஜி, கேபிடல் குட்ஸ் ஆகிய துறை பங்குகளில் வாங்கும் போக்கு இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்