சூரிய மின்னுற்பத்தியில் தமிழகம் முதலிடத்தைப் பிடிக்குமா?: நீதிமன்றத் தீர்ப்பால் முடங்கியுள்ள பணிகள்

By ம.இரமேஷ்

சூரிய மின்னாற்றல் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை மாநிலமாக உருவாகும் என்ற எதிர்பார்ப்பை கடந்த வாரம் வெளியான நீதிமன்றத் தீர்ப்பு நீர்த்துப் போகச் செய்துள்ளது.

சூரிய ஒளி மின்னுற்பத்தியாளர்களிடமிருந்து 700 மெகாவாட் மின்சாரத்தை வாங்கு வதற்கான ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) கையெழுத் திடுவதற்கு முட்டுக் கட்டையாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

தீர்ப்பின் விவரத்தை அறியும் முன்பு சூரிய மின்னுற்பத்தியின் பின்னணியைத் தெரிந்து கொள்வது அவசியம்.

தமிழக அரசு தனது 'சூரிய ஒளி சக்தி கொள்கையை 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து 2013 மார்ச் மாதம் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின்சாரத்தை வாங்குவது' குறித்த ஸோலார் பர்சேஸ் ஆப்ளிகேஷன்’ (solar purchase obligation -SPO) வெளியிட்டது. அதில் மின்சாரத்தை வாங்கும் நிறுவனங்கள் தமது மின் நுகர்வில் முதல் ஆண்டில் 3 சதவீதமும், அதற்கடுத்த ஆண்டுகளில் 6 சதவீதமும் சூரிய ஒளி மின் ஆலைகளிருந்து பெறவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த SPO மூலம் சூரிய ஒளி மின்சாரம் வாங்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு நிறுவனங் கள் தள்ளப்பட்டன. இதனால் சூரிய ஒளி மின்சாரத்திற்கு மிக பெரிய தேவையை (demand) ஏற்படுத்தித் தந்தது தமிழக அரசு. இந்த தேவையைப் பூர்த்தி செய்ய கடந்த ஆண்டு தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்காக ஓர் ஒப்பந்தப் புள்ளியை வெளியிட்டது. அதன் மூலம் ஏறக்குறைய 700 மெகாவாட் அளவிற்கு பல சூரிய ஒளி சக்தி ஆலைகளை துவங்கும் தொழில்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு தரப்படும் விலை முதல் ஆண்டில் ஒரு யூ னிட்டுக்கு ரூபாய் 6.48-ம், பின்வரும் ஒன்பது ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 5 சதவிகித கூடுதலும் தர வேண்டும் என்று டென்டர் மூலமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

இப்படி SPO-வினால் கிராக்கியை உண்டாக்கி அதன் வழியாக சூரிய ஒளி மின்சார உற்பத்தியாளர்களுக்கு கணிசமான வருமானத்தைப் பெற்று தரவல்ல இந்த தமிழ்நாட்டு ஸோலார் கொள்கையைப் பலரும் பாராட்டினர். மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழும் என்றனர்.

ஒரே வருடத்தில் தமிழகம் முழுவதும் சூரிய ஒளி ஆலைகளுக்கான கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன. டான்ஜெட்கோ மற்றும் சூரிய ஒளி மின் ஆலை நிறுவனங்கள் இடையே மின்சாரம் வாங்குவதற்கான “பவர் பர்சேஸ் அக்ரீமென்ட்' (Power Purchase Agreement) ஒப்பந்தம் கையெழுத்து ஆகி விடும்என்ற நிலையில், சில மின்சார நுகர்வோர் கூட்டமைப்புகள் SPO-விற்கு எதிராக நீதிமன்றத்தை அணுகினர்.

இவர்களின் வாதம் 'மத்‌திய சட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின்சாரம் ஒழுங்குமுறை ஆணையம் ' ரினியூவபிள் பர்சேஸ் ஆப்ளிகேஷன், அல்லது RPO' என்ற கட்டாயத்தை நுகர்வோர் மீது ஏற்கெனவே சுமத்தியுள்ளது. இதன்படி நாங்கள் எங்கள் நுகர்வில் 9 சதவிகிதம் மரபு சாரா எரியாற்றல் வழி மின்சாரம் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்கெனவே கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில் SPO என்ற மற்றொரு கட்டாயத்தை தங்கள் மீது சுமத்த ஒழுங்குமுறை ஆணையத்திற்கு சட்டத்தில் இடமில்லை.

அதனால் ஆணையத்தின் ஸோலார் ஆர்டரை ஒத்தி வைக்க வேண்டும்.' என முறையீடு செய்தன. மின்சார மேல் முறையீட்டு தீர்ப்பாயம் (Appellate Tribunal for Electricity) இந்த வாதத்தைஏற்று TNERCயின் ஆர்டரை கடந்த வாரம் ஒத்திவைத்தது.

இதன் விளைவாக SPO மூலமாக உருவாகியிருக்க வேண்டிய சூரிய ஒளி மின்சார த்துக்கு கிராக்கி இல்லாமல் போயிற்று. SPO என்ற கட்டாயம் இல்லை என்றால் விலை கூடுதலான சூரிய ஒளி மின்சாரத்தை யார் வாங்குவார்கள்? சூரிய ஒளிமின் உற்பத்தியாளர்களிடமிருந்து டான்ஜெட்கோ வாங்கினால், அதனை நஷ்டத்திற்குத்தானே விற்க வேண்டி இருக்கும்? ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வரும் டான்ஜெட்கோவினால் மேலும் நஷ்டத்தை ஏற்க முடியாதல்லவா? ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டதே என்று பலர் நினைக்கும் இந்தத் தருணத்தில், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, பயப்படவேண்டாம் என்று விவரமறிந்த நிபுணர்கள்

பல வாதங்களை முன்வைக் கிறார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

8 mins ago

வணிகம்

6 hours ago

வணிகம்

5 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்