டாடா எஸ்.ஐ.ஏ. ஏர்லைன்ஸ் தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஏறக்குறைய 20 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விமான சேவையில் ஈடுபட டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் விமான சேவையைத் தொடங்க டாடா சன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய நிறுவனத்துக்கு டாடா எஸ்.ஐ.ஏ. ஏர்லைன்ஸ் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

கூட்டாகத் தொடங்கப்படும் இந்த விமான நிறுவனத்துக்கு முதல் கட்டமாக 10 கோடி டாலர் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் டாடா சன்ஸ் 51 சதவீதப் பங்குகளையும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 49 சதவீதப் பங்குகளையும் கொண்டிருக்கும். இதன்படி டாடா சன்ஸ் 5.1 கோடி டாலரும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 4.9 கோடி டாலரையும் முதலீடு செய்ய உள்ளன.

விமானத் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யலாம் என அரசு அனுமதித்த பிறகு இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனம் மேற்கொள்ளும் மூன்றாவது முதலீட்டு ஒப்பந்தம் இதுவாகும்.

இந்தியாவில் முதன் முதலில் டாடா நிறுவனம் விமான சேவையை 1932-ம் ஆண்டு தொடங்கியது. அப்போது அந்நிறுவனம் செய்த முதலீட்டுத் தொகை ரூ. 2 லட்சமாகும். ஆனால் இப்போது அந்நிறுவனம் 15 ஆயிரம் மடங்கு கூடுதல் தொகையை வெறும் 51 சதவீத பங்குகளுக்காக முதலீடு செய்ய உள்ளது. இந்நிறுவனம் முதலீடு செய்ய உள்ள தொகை ரூ. 300 கோடியாகும்.

1932-ல் டாடா ஏவியேஷன் சர்வீசஸ் நிறுவனம் மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியாவுடன் இணைந்து விமான சேவையைத் தொடங்கியது.

1942-ல் டாடா சன்ஸின் அங்கமான டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் கூட்டு நிறுவனமாகி ஏர் இந்தியா என அழைக்கப்பட்டது.

1947-ல் இந்நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளை அரசு எடுத்துக் கொள்ளச் சொல்லியது டாடா நிறுவனம். அதில் உருவானதுதான் ஏர் இந்தியா இண்டர்நேஷனல்.

ஏர் இந்தியா இண்டர்நேஷனல் நிறுவனம் சர்வதேச அளவில் விமான சேவையைத் தொடங்கியது. இதில் டாடா நிறுவனத்துக்கு 25 சதவீத பங்கு இருந்தது. எஞ்சிய பங்குகள் அனைத்தும் பொதுமக்கள் வசம் இருந்தது.

அரசு மற்றும் தனியார் துறை ஒத்துழைப்புடன் முதன் முதலில் தொடங்கப்பட்டது இந்நிறு வனம்தான். இப்போது மிகவும் பிரபலமாக உள்ள தனியார் பங்க ளிப்புடன் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளுக்கு இதுவே ஆரம்பமாக இருந்தது.

1948-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி ஏர் இந்தியாவின் மஹாராஜா தனது சிறகுகளை விரித்து ஐரோப்பிய நாடுகளுக்குப் பறக்கத் தொடங்கினார்.

11 விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும் இரண்டு மூன்று நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன.

1953-ம் ஆண்டு அனைத்து விமான நிறுவனங்களையும் அரசுடைமையாக்க அரசு திட்டமிட்டது. இதனடிப்படையில் ஒரே கார்ப்பரேஷனாக மாற்றப்பட்டு ஜேஆர்டி டாடா அதன் தலைவராக செயல்பட்டு வந்தார்.

1993-ம் ஆண்டு மீண்டும் விமான சேவையில் ஈடுபட டாடா நிறுவனம் முன்வந்தது. ஆனால் பின்னர் அந்த முயற்சியைக் கைவிட்டது. இப்போது 20 ஆண்டு இடைவெளிக்குப பிறகு விமான சேவையில் இந்நி றுவனம் இறங்கியுள்ளது. சமீபத்தில் துவங்கபட்ட ஏர் ஏசியா நிறுவனத்தில் டாடாவின் பங்கும் இருக்கிறது.

இதுகுறித்து டாடாவின் ஊடக பிரிவு தொடர்பாளரிடம் கேட்ட போது, ஏர் ஏசியா நிறுவனத்தின் சந்தை வேறு. இந்த நிறுவனத்தின் சந்தை வேறு.

மேலும் இந்த ஒப்பந்தம் குறித்து ஏர் ஏசியா நிறுவனத்துக்கு தெரியும் என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE