தமிழகத்தில் மழை குறைவாக இருப்பதினால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் டிராக்டர் விற்பனை குறைவாக இருக்கிறது என சோனாலிகா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஏ.எஸ்.மிட்டல் தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார் பூரில் உள்ள சோனாலிகா இன்டர் நேஷனல் நிறுவனத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறிய தாவது: இந்தியாவின் கிழக்கு மாநிலங்கள் விவசாயத்தில் இப்போதுதான் இயந்திரங்களை பயன்படுத்துகின்றன. அதனால் இந்த மாநிலங்களில் டிராக்டர் விற்பனை அதிகரித்திருக்கிறது. இருந்தாலும், மொத்த விற்பனை யில் உத்தரப்பிரதேச மாநிலம் முக்கிய பங்கினை வகிக்கிறது. தமிழகத்தில் விற்பனை குறித்த துல்லியமான எண்கள் இல்லை என்றாலும், வறட்சி காரணமாக தமிழகத்தில் விற்பனை அதிக அளவில் இல்லை.
வங்கிகள் விவசாயத்துக்கு கடன் கொடுத்தாலும் விவசாய உபகரணங்கள் வாங்குவதற்கு அதிகளவில் கடன்கள் வழங்குவ தில்லை. டிராக்டர்களுக்கான கடன் களை 95 சதவீதம் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களே வழங்கு கின்றன. வங்கிகள் கடன் வழங்கும் பட்சத்தில் விவசாயி களுக்கு பயனுள்ளதாக இருக் கும். இதற்காக வங்கி அல்லாத நிதி நிறுவனம் தொடங்கும் திட்டம் எங்களிடம் இல்லை. பெரும்பாலான நிதி நிறு வனங்களுடன் ஒப்பந்தம் போட்டி ருப்பதால் எங்கள் வாடிக்கையாளர் களுக்கு கடன் கிடைப்பதில் பிரச்சினை இல்லை என்றார்.
டிராக்டர்களை பொருத்தவரை குதிரை திறன் அடிப்படையிலே வாடிக்கையாளர்கள் முடிவெடுப் பார்கள். சோனாலிகா நிறுவனம் 20 குதிரை திறன் முதல் 120 குதிரை திறன் வரையிலான டிராக்டர்களை தயாரித்து வருகிறது. 120 குதிரை திறனுக்கு மேல் இருக்கும் டிராக்டர்களை தயாரிக்கும் திட்டம் இருக்கிறதா என்னும் கேள்விக்கு, நிச்சயம் அந்த திட்டம் இருக்கிறது. 180 குதிரை திறன் உடைய டிராக் டர்களை தயாரிப்போம். ஆனால் இந்த வகை அதிக குதிரை திறன் உடைய டிராக்டர்கள் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடுவோம். இந்தியாவை பொறுத்தவரை 60 குதிரை திறன் இருக்கும் டிராக்டர் களே போதுமானது என்றார்.
உள்நாட்டில் சோனாலிகா என்னும் பெயரிலும் வெளிநாடு களுக்கு சோலிஸ் என்னும் பெயரி லும் இந்த நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போது 80 நாடுகளுக்கு இந்த நிறுவனத்தின் டிராக்கர்கள் ஏற்றுமதியாகின்றன.
நிறுவனத்தின் உற்பத்தி திறன் 2 லட்சமாக இருந்தாலும், சந்தையில் தேவை குறைவாக இருப்பதால் உற்பத்தி திறனைவிட குறைவாக டிராக்டர்கள்தான் தயாரிக்கப்படுகின்றன. தேவை அதிகரிக்கும் போது எங்களால் உற்பத்தியை உயர்த்த முடியும். தற்போது மூன்று நிமிடங் களுக்கு ஒரு டிராக்டர் தயாரிக்கப் பட்டு வருகிறது. தேவை அதிகரிக் கும்போது 2 நிமிடங்களுக்கு ஒரு டிராக்டரினை தயாரிக்க முடியும் என மிட்டல் தெரிவித்தார்.
கடந்த நிதி ஆண்டில் உள்நாட்டு டிராக்டர் விற்பனை 81,531 ஆகும். முந்தைய நிதி ஆண்டைவிட 18 சதவீத வளர்ச்சி ஆகும். அதேபோல வெளிநாட்டு விற்பனை 29.3 சதவீதம் உயர்ந்து 12,241 டிராக்டர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
அடுத்த ஐந்தாண்டுகளில் ஏற்றுமதியை 50,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் மிட்டல் கூறினார்.
karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago