மோடி பிரதமரானால் பொருளாதாரம் வளரும்: மூடி’ஸ்

By செய்திப்பிரிவு

நாட்டின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடி பதவிக்கு வந்தால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று மூடி’ஸ் தரச்சான்று நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

சமீப மாதங்களாக பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், தொழில் தொடங்க உகந்த சூழலை ஏற்படுத்தும் நரேந்திர மோடி, பிரதமரானால் நாட்டின் பொருளாதாரம் 2015-ல் வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் சிறந்த நிர்வாகத் திறன் கொண்டவருக்கு அளிக்கப்படும் ஒரு வாய்ப்பாகும். அத்தகைய சூழலில் தொழில் துறையினருக்கு மிகுந்த நண்பராகத் திகழும் நரேந்திர மோடி பிரதமரானால், பொருளாதாரம் ஏற்றம் பெறும். வளர்ச்சியடைவதை நடப்பு ஆண்டிலேயே ஓரளவு உணர முடியும் என்றும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாகக் வளர்ந்துள்ள நிலையில் இது மேலும் வளர்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக நிறுவனத்தின் மூத்த பொருளாதார அறிஞர் கிளென் லெவைன் குறிப்பிட்டுள்ளார்.

2014-ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு அது லேசான உயர்வை எட்டும். சமீபகாலமாக பணவீக்கம் சரிவைச் சந்தித்து வருகிறது. மேலும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அளவும் குறைந்து வருகிறது. ஆனாலும் பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படவேயில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு 4.8 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் (2013-14) ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2.4 சதவீத அளவுக்குக் கட்டுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2014-ம் ஆண்டில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் மேற்கொள்ள உள்ள மானியக் குறைப்பு நடவடிக் கைகளை இந்திய பொருளாதாரம் தாங்கி நின்றுள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பரை உள்ளடக்கிய மூன்றாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாக இருந்துள்ளது என்றும் லெவைன் சுட்டிக் காட்டி யுள்ளார்.

வளர்ச்சிக்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்ட போதிலும் முந்தைய இரு காலாண்டுகளிலும் வளர்ச்சி அதிகரிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு நிதிஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.9 சதவீத அளவுக்கு இருக்கும் என்றும் 3வது மற்றும் 4வது காலாண்டில் வளர்ச்சி அளவு 5.2 சதவீதமாக உயரும் என்றும் கணித்தது. மூன்றாம் காலாண்டில் நாடு எட்டிய வளர்ச்சி விகிதத்தை 28-ம் தேதி அரசு வெளியிட உள்ளது.

பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் காரணிகளில் பெரும்பாலான துறைகள் மிகவும் பலவீனமாகவே உள்ளன. 2013-ம் ஆண்டு முழுமையிலும் உற்பத்தித் துறை மற்றும் சுரங்கத் தொழில் வளர்ச்சியை எட்டவேயில்லை. நுகர்வோரி டையிலான பொருள்கள் தேவை மிகவும் குறைவாகக் காணப் பட்டது. மேலும் உள்நாட்டில் சேவைத்துறை வளர்ச்சியும் குறிப்பிடத்தகுந்த அளவை எட்டவில்லை.

தொழில்துறை முதலீடுகள் 2013-ல் குறைந்தே காணப்பட்டது. இந்தியாவில் முதலீடு செய்யும் அன்னிய நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இதற்கு நம்பகத் தன்மையும் ஒரு காரண மாகும். கடனுக்கான வட்டி அளவு ஆண்டின் பிற்பாதியில் அதிகரித் துள்ளது என்றும் லெவைன் குறிப் பிட்டார்.

ஏற்றுமதியைப் பொறுத்த மட்டில் பெருமளவில் வர்த்தகம் நடைபெற்றாலும் ஏற்றுமதி அளவு, அதாவது மதிப்பு குறைந்தே காணப்பட்டுள்ளது. அதிலும் உற்பத்தித் துறை பங்க ளிப்பு குறைந்துள்ளது. சர்வ தேச பொருளாதார நிலைமை மாறு வதைப் பொறுத்தே ஏற்றுமதி அமையும் என்று ஏற்றுமதி யாளர்கள் காத்திருப்பதாக லெவைன் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

மேலும்