மும்பையை மையாகக் கொண்டு செயல்படும் லூப் மொபைல் நிறு வனத்தை பார்தி ஏர்டெல் வாங்கு வதற்காக ஒப்பந்தம் போட்டது. ஆனால் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இந்த இணைப்புக்கு ஒப்புதல் வழங் காததால் லூப் மொபைல் நிறு வனத்தை வாங்கும் திட்டத்தை பார்தி ஏர்டெல் நிறுவனம் கைவிட்டது.
கடந்த மார்ச் மாதம் இந்த இணைப்பு குறித்து தொலைத் தொடர்பு துறைக்கு அனுப்பபட்டது. இதுவரையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை.
இந்த இணைப்பு நடக்காததால் லூப் மொபைல் நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு என்று லூப் மொபைல் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி (சி.ஓ.ஓ) சூர்யா மகாதேவன் தெரிவித்தார்.
மும்பை நகரத்தில் தன்னுடைய வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிப்பதாக ஏர்டெல் நிறுவனம் லூப் மொபைலை இணைப்பதாக அறிவித்தது. ஆனால் இந்த இணைப்பில் வாடிக்கையாளர் களை மட்டும் எடுத்துக்கொண்ட ஏர்டெல் பணியாளர்களைத் தவிர்த்துவிட்டது. இந்த இணைப்பு தொடர்பான நிதி விவரங்கள் அதி காரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை என்றாலும் ரூ.700 கோடி இருக்கும் என்று தெரிகிறது.
லூப் மொபைல் நிறுவனத்தின் உரிமம் வரும் நவம்பர் 29-ம் தேதி வரைதான் இருக்கிறது. வாடிகை யாளர்கள் மற்ற டெலிகாம் நிறு வனத்துக்கு மாறுவதற்கான வேலை களைச் செய்கிறோம் என்று லூப் மொபைல் நிறுவனம் தெரிவித் திருக்கிறது. லூப் மொபைல் நிறு வனத்தின் பாதிக்கும் மேற்பட்ட கடைகள் ஏற்கெனவே அடைக் கப்பட்டிருக்கின்றன. 50 சதவீத பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள்.
இந்த இணைப்பு அறிவிப்பு வந்தபோது லூப் மொபைல் நிறுவனத்தில் 30 லட்சம் வாடிக் கையாளர்கள் இருந்தார்கள். தனியார் வங்கியான ஆக்ஸிஸ் லூப் மொபைல் நிறுவனத்துக்கு 215 கோடி ரூபாய் கடன் கொடுத் திருக்கிறது. இந்த இணைப்பு ரத்தாகவிட்டதால் அந்த வங்கிக்கு இந்தத் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
4 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago