டிஎஸ்க்யூ சாஃப்ட்வேர் நிறுவனத்திற்கு 7 ஆண்டு தடை

By செய்திப்பிரிவு

டிஎஸ்க்யூ சாஃப்ட்வேர் மற்றும் அந்நிறுவன நிறுவனர் தினேஷ் டால்மியாவுக்கு பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) 7 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. 1998-ம் ஆண்டு முறைகேடான வர்த்தகம் காரணமாக இந்நிறுவன பங்கு விலை அதிகபட்ச விலைக்கு விற்பனையானது.

இதுகுறித்து விசாரித்த செபி குழு, நிறுவனத்தின் தலைவர் தினேஷ் டால்மியா விடுத்த தவறான கருத்து களடங்கிய அறிக்கையே அந் நிறுவன பங்குகளின் விலை உயர காரணம் என கண்டறியப் பட்டது.

இதே துறையைச் சேர்ந்த பங்குகளின் விலை உயர்ந்ததைக் காட்டிலும் டிஎஸ்க்யூ் பங்கு அதிகம் உயர்ந்தன. மற்ற நிறுவனப் பங்கு களின் விலை 140 சதவீதத்திலிருந்து 340 சதவீதம் வரை அதிகரித்த போது டிஎஸ்க்யூ பங்குகள் 1998-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 750 சதவீதம் வரை உயர்ந்தது.

அக்டோபர் 3-ம் தேதி செபி வெளியிட்ட உத்தரவில், இவரோ இவர் சார்ந்த நிறுவனமோ பங்குச் சந்தையில் ஈடுபட 7 ஆண்டு தடை விதிக்கப்படுகிறது என தெரிவித் துள்ளது.

தினேஷ் டால்மியா மற்றும் அவரது நிறுவனத்துக்கு எதிராக மூன்று வழக்குகள் இதில் ஒன்று யுடிஐ வங்கி (கொல்கத்தா) பதிவு செய்துள்ளது. அதாவது செயற்கை யாக பங்குகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும்படி செய்தார் என்பதே அது.

மேலும் பங்குகளின் விலை குறித்த அறிக்கையை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுவும் நிறுவன பங்கு விலையேற்றத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

ஜப்பான் நிறுவனத்திடமிருந்து ஆர்டர் பெற்றுள்ளதாக இந் நிறுவனம் வெளியிட்ட போலியான தகவல் பங்கு உயர்வுக்கு வழிவகுத்ததாக செபி கண்டறிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்