Vote on Account - என்றால் என்ன?

By செய்திப்பிரிவு

Vote on Account என்பது ஒரு வருடத்தின் பட்ஜெட்டை எவ்வித மாற்றமும் இல்லாமல் அடுத்த வருடத்தின் முதல் இரண்டு மாதத்திற்கு நீடிப்பதாகும். சில சமயங்களில் Vote on Account ஆறு மாதங்கள் வரை கூட நீட்டிக்கப்படும். அதாவது, இந்த வருடம் எவ்விதமான வரி விதிப்புகளும், செலவுத் திட்டங்களும் இருந்தனவோ அவை எல்லாம் எவ்வித மாற்றமும் இல்லாமல் அடுத்த இரண்டு அல்லது ஆறு மாதங்கள் வரை செயல் படுத்துவதற்கான கணக்குத் தான் Vote on Account மூலமாக சமர்ப்பிக்கப்படுகிறது.

Vote on Account யை எக்காரணத்திற்காக சமர்ப்பிக்க வேண்டும்? ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி கடைசி வேலை நாளன்று சமர்பிக்கப்படும் பட்ஜெட், மார்ச் 30 க்குள் Finance Bill, Appropriation Bill ஆகியவை மூலமாக மக்களவையில் நிறைவேற்றபட்டு, குடியரசுத் தலைவரால் ஒப்புக் கொள்ளபடவேண்டும். சில சமயங்களில், பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல்-மே மாதங்கள் வரை செல்லும். அச்சமங்களில் Vote on Account ஒன்றினை மார்ச் 30 க்குள் சமர்ப்பித்து மக்களவையின் ஒப்புதல் பெறப்படும். அப்போதுதான் ஏப்ரல் 1, அன்று அரசு கஜானாவை திறந்து செலவு செய்யமுடியும்.

சில சமயங்களில் ஒரு நிதி ஆண்டின் முதல் ஆறு மாததிற்குள்ளேயே ஒரு மக்களவையின் காலம் முடிவடைகிறது என்றால், அரசு, Vote on Account மூலமாக அடுத்த ஆறு மாதத்திற்கு வரவு-செலவு செய்யும் அதிகாரத்தை பெரும். பொதுவாக Vote on Account இல் புதிய வரி விதிப்புகளும், புதிய செலவுத்திட்டங்களும் அறிவிக்கப்படுவதில்லை. பட்ஜெட்டின் அளவை பாதிக்காதவகையில் புதிய அறிவிப்புகளோ அல்லது ஆலோசனைகளோ நிதி அமைச்சரால் கூறப்படும்.

தற்போதுள்ள பதினைந்தாவது மக்களவையின் பதவிக் காலம் 2014 மே மாதத்தில் முடிவடைவதால், நிதி அமைச்சர் 2014 பிப்ரவரி மாதம் Vote on Account -ஐ சமர்ப்பிப்பார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

வணிகம்

5 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்