வங்கியாளர்களை இன்று சந்திக்கிறார் ப.சிதம்பரம்

By செய்திப்பிரிவு

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்திருக்கும் சூழ்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகளை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் புதன்கிழமை சந்திக்கிறார்.

கோல்கத்தாவை மையமாக கொண்டு செயல்படும் பொதுத் துறை வங்கியான யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவின் வாராக்கடன் 10.82 சதவீதமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் நிதி அமைச்சரின் சந்திப்பு நிகழ இருக்கிறது.

தற்போதைய அரசு வங்கியாளர்களை சந்திக்க விருக்கும் கடைசி சந்திப்பு இதுவாகத்தான் இருக்கும். வாராக்கடன்களை எப்படி குறைப்பது, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட துறைகளில் கடன் வளர்ச்சியை எப்படி அதிகரிப்பது உள்ளிட்டவை முக்கிய இலக்காக இருக்கும் என்று பெயர் வெளியிட விரும்பாத நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாத முடிவில் பொதுத்துறை வங்கி களின் வாராக்கடன் ரூ. 2.03 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த மார்ச் மாத முடிவில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ. 1.55 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுத்துறை வங்கிகளையும் சேர்க்கும் பட்சத்தில் கடந்த மார்ச் மாத முடிவில் ரூ. 2.36 லட்சம் கோடி வாராக்கடன் இருக்கிறது.

பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலைமை குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்படும். வங்கி நிர்வாகத்துக்கும், ஊழியர் சங்கத்துக்கும் இடையேயான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ஊதிய உயர்வு குறித்து நிதி அமைச்சர் சாதகமான முடிவு எடுப்பார் என்று ஊழியர் சங்கங்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இடைக்கால பட்ஜெட்டில் கல்விகடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பு குறித்தும் விவாதிக்கப்படும். மார்ச் 2009-ம் ஆண்டுக்கு முன்பு எடுத்த கல்வி கடனுக்கான வட்டி விகிதம் தள்ளுபடி செய்யப்படும்.

டிசம்பர் மாத முடிவில் பொதுத் துறை வங்கிகளில் 25,70,254 கல்வி கடன் கணக்குகள் இருக்கிறது. மொத்தம் 57,700 கோடி ரூபாய் இன்னும் பாக்கி இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

6 days ago

மேலும்