திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர் சங்கத்தின் புதுமையான, நம்பிக்கையளிக்கும் வகையிலான தமிழகத்தின் முதலாவது தையல் பயிற்சியுடன் கூடிய பனியன் ஆடை உற்பத்திக் கூடம் திருவாரூரில் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
‘எம்ஜேஎஸ்எஸ் கார்மெ ன்ட்ஸ்’ என்ற பெயரில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தால் (டிஇஏ) புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘ஸ்ரீபுரம்’ அறக்கட்டளையின் ‘ஒளி விளக்கு’ திட்டத்தில் இந்தத் தொழிற்கூடம் தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பூரின் பெரும் நிறுவனங் களில் ஒன்றான சிபிசி ஃபேஷன்ஸ் (ஆசியா) நிறுவனத்துக்காக இங்கு உள்ளாடைகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இதற்கான தொடக்க விழாவில் நிஃப்ட்- டிஇஏ ஆடை வடிவமைப்புக் கல்லூரியின் முன்னாள் தலைவரும் ஸ்ரீபுரம் அறக்கட்டளையின் தலைவருமான எம். ராஜாசண்முகம் பேசியது:
“சீனாவுக்கு அடுத்ததாக மக்கள்தொகை அதிகம் உள்ளது இந்தியா. நாட்டின் பனியன் ஆடைத் தேவையில் 70% திருப்பூரில்தான் உற்பத்தியாகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பூர் ஒரு குக்கிராமமாகத்தான் இருந்தது. ஆனால், இன்று ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறது. மற்ற துறைகளைக் காட்டிலும் ஆடை உற்பத்தித் துறை நல்ல வளர்ச்சி அடைந்து வருவதால், இந்த தொழிலுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அதனால், உழைக்க ஆர்வமுள்ள அனைவருக்கும் திருப்பூரில் வேலை உள்ளது.
இந்தியாவில் திருப்பூரில் மட்டும்தான் நேற்றைய தொழிலா ளர்கள் இன்றைய முதலாளிகளாகும் வாய்ப்பு உள்ளது. அதற்கு நானே சிறந்த உதாரணம். விவசாயக் குடும்பத்தில் பிறந்த முதல் தலைமுறை தொழிலதி பரான எனது நிறுவனத்தில் 2,000 பேர் பணிபுரிகின்றனர். திருப்பூருக்கு வர இயலாத, உழைக்க ஆர்வமுள்ளவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வகை யிலும், அவர்களது பகுதியிலேயே வேலைவாய்ப்ப ளிக்கும் வகையிலும் திருவா ரூரில் முதலாவதாக இந்தத் இத்தொழிற்கூடத்தை தொடங்கி யுள்ளோம். அடுத்தடுத்து மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் தொடங்கப்படும்” என்றார்.
ஆடிட்டர் டி.ஆர். ராமநாதன்: “இங்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எவ்வளவு பேருக்கு வேண்டுமானாலும் இங்கு பயிற்சியும், வேலையும் அளிக்கப்படும். இங்கு முதல் தொகுதியில் சேர்ந்துள்ள 200 பேரும் சிறந்த முறையில் தொழில் கற்றுக்கொண்டு திருப்பூரின் தூதுவர்களாக மாற வேண்டும். உங்களைப் பின்பற்றி பல்லாயிரம் பேர் உருவாக வேண்டும். அனைவருக்கும் வேலை தர நாங்கள் தயார். இதன் மூலம் விரைவில் திருவாரூரும் திருப்பூராகும்” என்றார்.
பிரைம் டெக் நிர்வாக இயக்குநர் தீபக்: “திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் படிக்காதவர்கள், குறைவாகப் படித்தவர்கள் கூட தேர்ந்த ஸ்கில்டு லேபராக முடியும். திருவாரூர் தொழிற்கூடத்தில் சேர வயது, உடல் தகுதி போன்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை. 18 வயதான, உழைக்க ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் சேரலாம்” என்றார்.
பயிற்சியும், பணியும் ஒரே இடத்தில்…
இந்த தொழிற்கூடத்தின் செயல்பாடுகள் குறித்து சிபிசி பேஷன்ஸ் (ஆசியா) நிறுவன நிர்வாக இயக்குநர் டி.ஆர். விஜயகுமார் தெரிவித்தது:
ஸ்ரீபுரம் என்பது திருப்பூரைக் குறிக்கும் மற்றொரு பெயர். அதன் பெயரிலேயே அங்குள்ள 180 ஏற்றுமதியாளர்களும் சேர்ந்து ஸ்ரீபுரம் அறக்கட்டளையை உருவாக்கியுள்ளோம். திருவாரூர் தொழிற்கூடத்தில் முதல் கட்டமாக உள்நாட்டு சந்தைக்கான பனியன், ஜட்டி போன்ற உள்ளாடைகள் மட்டுமே தயாரிக்கப்படும். கட்டிங், பேக்கிங் போன்றவை திருப்பூரில் நடைபெறும்.
ஏற்கெனவே தையல் தெரிந்தவர்களுக்கு ஒரு வாரம் பயிற்சியளித்து அவர்களுக்கு தையல் பணிகள் வழங்கப்படும். தையல் தெரியாதவர்களுக்கு ஒரு மாதம் அடிப்படை தையல் பயிற்சியும், 2 மாதம் அனுபவ பயிற்சியும் அளிக்கப்பட்டு, அவர்கள் தையல் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். அதன் பின்னர் நாள் ஒன்றுக்கு ரூ.150 முதல் ரூ.250 வரை ஊதியம் கிடைக்கும். படிப்படியாக இது அதிகரிக்கும். இங்கு பணிபுரிந்து தனியே தொழில் தொடங்க விரும்புகிறவர்களுக்கு அதற்கேற்ற உதவிகள் செய்யப்படும்.
காலை 6 முதல் 7.30 மணி வரை பயிற்சி, காலை 9 முதல் மாலை 6 மணி வரை தையல் பணி, மாலை 6 முதல் இரவு 7.30 வரை பயிற்சி நடைபெறும். பயிற்சியும், பணியும் ஒரே இடத்தில் கிடைப்பதால், மிக விரைவிலேயே இத்துறையில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள முடியும்” என்றார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago