பணம் - 1 என்றால் என்ன?

By செய்திப்பிரிவு

நாணயங்களும், கரன்ஸிகளும்தான் பணம், இவற்றைக் கொண்டுதான் பரிவர்த்தனை நடைபெறுகிறது என்று பலரும் எண்ணுகின்றனர். ஆனால், காசோலை, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, கணினி மின் தொகை மாற்றம் எனப் பல வழிகளில் நாம் பணம் செலுத்துகிறோம் என்பது பலருக்கு இன்றும் புதிது.

நாணயங்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன் 5 ஆம் 6 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஆங்கிலேயே அரசு வெளியிட்டிருந்த இந்தியப் பணத்தை பயன்படுத்தினோம், அதன் பிறகு 1950-லிருந்து புதிய சுதந்திர இந்தியாவின் கரன்சிகளை வெளியிட்டோம்.

நாணயங்களை வெளியிடுவதற்கு The Coinage Act 1906 என்று ஒரு சட்டம் உள்ளது. இச்சட்டத்தின்படி நாம் ஒரு ரூபாய்க்கு கீழே இருக்கும் நாணயங்களை வெளியிடுகிறோம். இப்போது ஒன்று, இரண்டு ரூபாய்களையும் நாணயங்களையும் வெளியிடுகிறோம்.

The Paper Currency Act 1861 படி ரூபாய் தாள்களில் கரன்சிகள் வெளியிடப்படுகின்றன. 1935 இல் RBI துவங்கப்பட்டு, 1938இல் முதலில் ஐந்து ரூபாய் தாள்களும் அதன் பிறகு அதிக மதிப்புடைய ரூபாய் தாள்களும் வெளியிடப்பட்டன. பிரிட்டிஷ் இந்தியாவில் வெளியிடப்பட்ட ரூபாய் தாள்கள் மன்னர் ஜார்ஜ் IV படத்தை கொண்டிருந்தன, சுதந்திர இந்தியாவில் வெளிடப்பட்ட ரூபாய் தாள்கள் முதலில் அசோக ஸ்தூபியையும், பின்னர் மகாத்மா காந்தி படத்தையும் கொண்டு வெளிடப்பட்டன. தற்போது 10, 20, 50, 100, 500, 1000 ரூபாய் தாள்கள் வெளிடப்படுகின்றன. RBI வெளியிடும் ரூபாய் தாள்களுக்கு வங்கிதாள்கள் ( banknotes) என்றும் குறிப்பிடுவர்.

ஒவ்வொரு நாட்டு கரன்ஸிக்கும் ஒரு குறியீடு உண்டு. உதரணமாக அமெரிக்க டாலர்க்கு $ என்றும் பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங்கிற்கு £ என்றும் குறிப்பிடுவது போல் இந்திய ரூபாயை INR என்று குறித்து வந்தோம், இப்போது அதற்கு ஒரு புதிய குறியீடு கொடுத்துள்ளோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 mins ago

வணிகம்

17 mins ago

வணிகம்

6 hours ago

வணிகம்

6 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்