சந்தையில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் புரோக்கர்கள், நிதி மேலாளர்கள் மீதான பிடியை பங்குச் சந்தை வாரியம் (செபி) மேலும் இறுக்கியுள்ளது.
புரோக்கர்கள், நிதி மேலாளர்கள் ஆகியோரிடையே நடைபெறும் பேச்சு வார்த்தை, பரிவர்த்தனை ஆகியவற்றைக் கண்காணிக்கவும் செபி முடிவு செய்துள்ளது. இணையதளம், சமூக வலைத் தளம் ஆகியவற்றை கண்காணிக்க செபி திட்டமிட்டுள்ளது.
பரிவர்த்தனை நடைபெறும் இடங்களில் சொந்த செல்போனுக்கு அனுமதி ஏற்கெனவே மறுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சில வாடிக்கையாளர்களுக்காக பங்கு களை வாங்குவது உள்ளிட்டவற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள சில நிதி மேலாளர்களும், புரோக்கர்களும் சமூக வலைத்தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவது கண்டுபிடிக்க ப்பட்டுள்ளது.
இது உள்பேர வணிகத்துக்கு வழிவகுப்பதோடு முறைகேடுகள் நடைபெறவும் வாய்ப்பாக அமைந்துவிடும். இதைக் கருத்தில் கொண்டு வர்த்தகம் நடைபெறும் பகுதியில் இத்தகைய சமூக வலைத் தளங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கையை செபி எடுத்துவருகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
7 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago