வணிக நூலகம்: சாதனைகளின் மையப்புள்ளி!

சாதனையாளராக வேண்டு மானால் சாதிக்க வேண்டும். சரி, சாதிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உங்களுடைய இலக்கை நோக்கி உங்களை வழி நடத்திச் செல்லும் முக்கிய மையப் புள்ளியை சரியாக அடையாளம் கண்டு, அதில் தொடர்ந்து கவனம் செலுத்துவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என்கிறார் இந்தப் புத்த கத்தின் ஆசிரியர் “பிரையன் டிரேசி”.

கணிசமான அளவிற்கு உங்கள் வருமானத்தை அதிகரிக்கச்செய்ய, உறவுமுறைகளில் மேம்பாடு அடைய, மகிழ்ச்சியான தருணங்களை அனு பவிக்க என வாழ்க்கையின் அனைத்து நிலைகளுக்கேற்ப நிரூபிக்கப்பட்ட செயல்முறைகளை இந்த புத்தகத்தில் கொடுத்துள்ளார் ஆசிரியர். மேலும், எவ்வாறு வாழ்க்கையை ஒழுங்கு படுத்துவது மற்றும் எளிமையாக்குவது என்பதற்கான வழிமுறைகளும் சொல்லப்பட்டுள்ளன. இதன்மூலம் உங்களைப்பற்றியும் உங்களுக்கான உலகத்தைப்பற்றியும் நீங்கள் புதிய வழியில் சிந்திக்கக் கற்றுக்கொள்வீர்கள் என்கிறார் ஆசிரியர்.

என்ன வேண்டும்?

உங்கள் வாழ்க்கையின் ஒட்டு மொத்த தரத்தினையும், நீங்கள் நினைத்ததை விடவும் அதிக விரைவாக உங்களால் வியக்கத்தக்க வகையில் மேம்படுத்த முடியும் என்கிறார் ஆசிரியர். இதைத்தான் எதிர்பார்த்தேன் என்கிறீர்களா?. அதற்கு உங்களிடம் சில பண்புகள் தேவை என்பதையும் ஆசிரியர் குறிப்பிடத் தவறவில்லை.

நீங்களே தலைவர்!

உங்களது தனிப்பட்ட செயல் என்பது ஒரு நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்திற்கு நீங்களே முதலாளி. ஆம், அப்படித்தான் நீங்கள் உங்களைப் பார்க்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளராக மட்டுமல்லாமல், உங்களை ஒரு தொழிலதிபராகவும் எண்ணிக்கொள்ள வேண்டும் என் கிறார். மேலும், அந்த நிறுவனத்தின் ஒரே ஒரு பணியாளர், அதுவும் நீங் களே. உங்களது தனிப்பட்ட செயல் பாடு என்னும் உற்பத்திப்பொருளை போட்டிகள் மிகுந்த சந்தையில் விற் பனை செய்யும் பொறுப்பும் உங்க ளுடையதே. இவை மட்டுமல்லாமல் தயாரிப்பு, தரக்கட்டுப்பாடு, பயிற்சி, வளர்ச்சி, தகவல் தொடர்பு, உத்திகள், உற்பத்தித்திறன் மேம்பாடு மற்றும் நிதி போன்ற உங்களது பணியின் ஒவ்வொரு பகுதிக்கும் முற்றிலும் நீங்களே பொறுப்பாளி.

இப்படி ஒட்டுமொத்தமாக அனைத்து பொறுப்புகளையும் கையாளும் மன நிலையின் வாயிலாக, மற்ற அனைத் தையும்விட அதிக மதிப்புடைய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பிட்ட சில விஷயங்களை உங்க ளால் அடையாளம் காணமுடிகிறது என்கிறார் ஆசிரியர். பிறகு, அந்த குறிப்பிட்ட விஷயங்களின் மீது மட்டும் உங்களது கவனத்தை முழுமையாக செலுத்த வேண்டும். இதன்மூலம் நேர விரயம் மட்டுமல்லாது உங்களுடைய ஆற்றல் இழப்பும் கட்டுப்படுத்தப்பட்டு வெற்றிக்கு வழிவகுக்கிறது என்பதே ஆசிரியரின் வாதமாக இருக்கின்றது.

பழக்கங்களின் பயன்!

பெரும்பாலும் நீங்கள் செய்யும் அனைத்து செயல்பாடுகளையும் உங் கள் பழக்கங்களே தீர்மானிக்கின்றன. காலை உறக்கத்திலிருந்து விழித்தது முதல், இரவு உறங்கச்செல்லும் வரை நீங்கள் சொல்லும் சொற்கள், நீங்கள் செய்யும் செயல்கள் மற்றும் மற்றவர்களின் செயல்களுக்கான உங்களின் பதில் என அனைத்தையும் பெரிய அளவில் கட்டுப்படுத்துவதும் கட்டளையிடுவதும் உங்களது பழக்கங்களே என்கிறார் ஆசிரியர்.

“எளிமையாவதற்கு முன் அனைத் தும் கடினமானதே” என்கிறார் ஒரு ஜெர்மானிய தத்துவஞானி. நல்ல பழக்கங்களை உருவாக்குவது கடினம் ஆனால் அதனோடு வாழ்வது எளிது. தீய பழக்கங்களை உருவாக்குவது எளிது ஆனால் அதனோடு வாழ்வது கடினம். அதனால் தீய பழக்கங்களை உங்களிடமிருந்து அகற்றுவதும், நல்ல பழக்கங்களை உங்களுக்குள் உருவாக்கிக்கொள்வதும் வெற்றிக்கு மிகவும் அவசியமானது என்கிறார் ஆசிரியர்.

மேம்பட்ட செயல்திறன்!

உங்களது பணியில் நீங்கள் சிறந்த வகையில் மேம்பாடடைய வேண்டுமா? அப்படியானால், நீங்கள் உங்களிடம் வழக்கமாக கேட்டுக்கொள்ளக்கூடிய வகையிலான ஐந்து கேள்விகளைக் கொடுத்துள்ளார் ஆசிரியர். உங்களது இலக்கு அல்லது உங்கள் முயற்சியின் பலன் என்ன என்பதை தொடக்கத்தி லேயே வரையறை செய்துகொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் ஒரு குழுவாக செயல்படுகின்றீர்கள் என் றால், குழுவிலுள்ள ஒவ்வொருவருக் கும் நாம் எதை நோக்கிச் செல்கி றோம் என்பது தெள்ளத்தெளிவாக செயலின் ஆரம்பத்திலேயே தெரிந் திருக்க வேண்டும்.

அடுத்ததாக, எப்படி செயல்படுத்தப் போகின்றீர்கள் என்பது தெரிந்திருக்க வேண்டும். செல்லும் வழி சிறந்ததா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதேசமயம், இதற்கு வேறு ஏதேனும் வழிமுறைகள் உண்டா என்பதையும் அறிந்திருக்கவேண்டும். அடுத்தபடியாக, இந்த செயலுக்கான உங்களது அனுமானங்கள் எவை என்பதையும் மிகச்சரியாக அறிந் திருப்பது அவசியமானது. அடுத்ததாக, உங்களது அனுமானங்களில் தவறு ஏற்படும் பட்சத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதற்கான பதிலும் உங்களிடம் இருக்கவேண்டும். இறுதியாக, உங்களது முக்கிய அனு மானங்கள் தவறும்போது, அதற்கான மாற்றுவழிகளை மேற்கொள்ளத் தேவையான விஷயங்கள் உங்களிடம் உள்ளனவா என்பதையும் உறுதிசெய்து கொள்ளவேண்டும்.

அவசரமும் முக்கியமும்!

வெறுமனே இலக்கினை நோக்கி தொடர்ந்து செயல்பாடுகளை வரி சையாக அமைத்துக்கொள்வதற்கு பதிலாக, எந்தெந்த செயல்களை எப்போது செய்யவேண்டும் என்பதை யும் எவற்றிக்கு முன்னுரிமை தந்து செயல்பட வேண்டும் என்பதையும் தெளிவாக அறிந்துக்கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர். இதை நான்கு வகைகளாகப் பிரித்து அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அவை: அவசரமானது மற்றும் முக்கிய மானது, அவசரமானது ஆனால் முக் கியமில்லாதது, அவசரமில்லாதது ஆனால் முக்கியமானது, அவசரமில் லாதது மற்றும் முக்கியமில்லாதது. இதில் அவசரமான மற்றும் முக்கிய பணிகளை தீவிரமானதாக கருதி, உடனடியாக அவற்றை செய்யத் தொடங்கிவிட வேண்டும்.

அடுத்தபடியாக முக்கியமான மற்றும் அவசரமில்லாத பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். உதாரண மாக முக்கியமான அறிக்கைகள் தயார் செய்வது, உடற்பயிற்சிக்கான திட்டமிடல், உங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது போன்றவை இதில் அடங்கும். அடுத்ததாக அவ சரமான மற்றும் முக்கியமில்லாத பணிகளை செய்ய வேண்டும். தொலை பேசி அழைப்புகள், ஈமெயில் தொடர்பு கள் போன்றவை இதில் அடங்கும். பெரும்பாலானவர்கள் இந்த வகை பணிகளிலேயே அதிகப்படியான நேரத்தை செலவிடுவதாகவும் குறிப்பிட் டுள்ளார் ஆசிரியர். இறுதியாக, அவசர மில்லாத மற்றும் முக்கியமில்லாத பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இவை அதிக நேர விர யத்தை ஏற்படுத்தும் என்றும் இவற்றை கொஞ்சம் சாவகாசமாக செய்தாலே போதும் என்றும் கூறுகிறார் ஆசிரியர்.

வாழ்வின் பகுதிகள்!

வாழ்வின் எந்தெந்த நிலைகளில் எப்படியான கவனத்தை செலுத்த வேண்டும் என்பதற்காக, அவற்றை ஏழு பகுதிகளாக வகைப்படுத்தியுள் ளார் ஆசிரியர். அவை: தொழில் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை, பணம் மற்றும் முதலீடு, சுகாதாரம் மற்றும் உடல்நலம், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், சமூக மற்றும் சமுதாய செயல்பாடுகள், ஆன்மிக மேம்பாடு மற்றும் மன அமைதி போன்றவையாகும். இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட அளவீட்டில் மதிப்பெண் அளித்து, அவற்றை வரிசைப்படுத்துங்கள். அதில் உங்களுக்கு பாதகமான பகு திகளைக் கண்டறிந்து அவற்றை சரி செய்துக்கொள்ளுங்கள்.

ஆசிரியரின் இந்த செயல்முறை களின் வாயிலாக உங்களது வெற்றியின் திருப்புமுனையை எளிதில் கண்டறிந்து, அதற்கேற்றவாறு செயல்படும்போது மிகச்சிறந்த சாதனைகளை நிகழ்த்தலாம். பெரிய பெரிய இலக் குகளுக்கு மட்டுமின்றி, உங்களது தினசரி செயல்பாடுகளுக்கும் இந்த வழிமுறைகளை உபயோகித்துப் பயன் பெறலாம் என்பது கூடுதல் தகவல்.

p.krishnakumar@jsb.ac.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE