குறைந்த கட்டண விமான சேவை அளிக்கும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும், சிங்கப்பூரைச் சேர்ந்த டைகர் ஏர் நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
டைகர் ஏர் நிறுவனமும் குறைந்த கட்டண விமான சேவை அளித்து வருவதில் முன்னணியில் திகழ்கிறது. இந்தியாவில் உள்ள 14 நகரங்களை சிங்கப்பூரிலிருந்து இணைக்கும் வகையிலான விமான சேவை அளிக்க ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்த விமானங்கள் ஹைதராபாத் விமான நிலையத்தை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி சிங்கப்பூரிலிருந்து டைகர் ஏர் விமானத்தில் வரும் பயணிகள் இந்தியாவில் உள்ள 14 நகரங்களுக்கு ஹைதராபாத் வழியாகச் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவையைப் பெற முடியும்.
ஆமதாபாத், போபால், சென்னை, கோல்கத்தா, கோவை, டெல்லி, பனாஜி, இந்தூர், மங்களூர், மதுரை, புணே, பெங்களூர், திருப்பதி, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு விமான இணைப்பைப் பெற முடியும்.
இதே போல ஸ்பைஸ்ஜெட் விமான பயணிகள் இந்த 14 நகரங்களிலிருந்து டைகர் ஏர் மூலம் சிங்கப்பூருக்குச் செல்ல முடியும். அறிமுக சலுகையாக ஒரு வழி பயணத்குக்கு ரூ. 4,699 கட்டணமும், இருவழி பயணக் கட்டணமாக ரூ. 9,998-ம் வசூலிக்கப்படும்.
இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகள் 20 சதவீதம்பேர் ஹைதராபாத் விமான நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த ஒப்பந்தம் பெருமளவு பயணிகளுக்கு பயனளிக்கும் என்று தெரிகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago