வளரும் நாடுகளை கவனத்தில் கொள்ள வேண்டும்: அமெரிக்காவுக்கு ரகுராம் ராஜன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் நிதிக் கொள்கைகளை வகுக்கும்போது, வளரும் நாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

சிட்னியில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பு நடத்திய நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் கவர்னர்கள் பங்கேற்ற மாநாட்டில் கலந்து கொண்ட அவர், அங்கிருந்து வெளியாகும் ஆஸ்திரேலியன் ஃபைனான்சியல் ரிவ்யூ இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தாராளமயமாக்கல், உலக மயமாக்கல் வந்தபிறகு எந்த ஒரு நாட்டையும் தனித்து முன்னே றுமாறு அதாவது தனியாக படகில் பயணிக்குமாறு கூறுவது சரியான அணுகுமுறை அல்ல. நீரில் மூழ்கு அல்லது நீந்தி கரையேறு என்று சொல்வது சரியாக இருக்காது என்றார்.

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் மேற்கொண்டு வரும் மானியக் குறைப்பு நடவடிக்கைகளை நேரடியாகக் குறிப்பிடாமல் பேசிய அவர் இதுபோன்ற நடவடிக்கைகள் பிற வளரும் நாடுகளையும் பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு இந்தியாவின் பொருளாதார நிலைமை வலுவாக உள்ளது. இருப்பினும் வளர்ச்சியடைந்த நாடுகள், தங்களது நிதிக் கொள்கை முடிவுகள் பிற நாடுகளின் பொருளாதாரத்தை எந்த வகையில் பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். நிலைமை சீரடையும்போது மாற்றங்களைக் கொண்டு வரவும் தயங்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜி20 மாநாட்டில் வகுக்கப்பட்ட நிதிக் கொள்கைகள் அனைத்து நாடுகளின் நிதிக் கொள்கைகளை உள்ளடக்கியதாக, வளர்ச்சி யடைந்த நாடுகளின் பொருளா தாரத்தை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

மானியக் குறைப்பு நடவடிக் கைகளை படிப்படியாக மேற்கொள் ளுமாறு இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார். அமெரிக்கா மேற்கொள்ளும் மானியக் குறைப்பு நடவடிக்கைகள் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை பாதிப்பதாகவும் அந்த நாடுகளின் கரன்சி மதிப்பை வீழ்ச்சியடையச் செய்வதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க பொருளாதார தேக்க நிலை மாறி வருவதால் கடன் பத்திரங்களை வாங்கும் அளவு 2,000 கோடி டாலரிலிருந்து 6,500 கோடி டாலர் வரை அதிகரிக்க அமெரிக்கா முடிவு செய்தது.

மானியக் குறைப்பு நடவடிக்கை, கடன் பத்திரங்களை திரும்பப் பெறுவது ஆகிய நடவடிக்கைகள் வெளிச்சந்தையில் பணப்புழக்கத்தை முற்றிலுமாக முடக்கிவிடும். இது வளரும் நாடுகளின் சந்தைகளைக் கடுமையாகப் பாதிப்பதோடு அந்நாடுகளின் கரன்சி மதிப்பை வீழ்ச்சியடையச் செய்துவிடும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மானியக் குறைப்பு நடவடிக்கை எடுக்கப் போவதாக 2013-ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் அறிவித்தவுடன் உலகம் முழுவதும் உள்ள சந்தைகளில் பெரும் சரிவு காணப்பட்டது. இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித் தது என்றும் ரகுராம் ராஜன் குறிப் பிட்டார்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பேசும்போது, எந்த ஒரு வளர்ச்சியடைந்த நாடும் மானியக் குறைப்பு, கடன் பத்திரங்களைத் திரும்பப் பெறுவது போன்ற நடவடிக்கைகளை எடுக்கும்போது வளரும் நாடுகளில் அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

மாநாட்டு முடிவில் வெளியிடப் பட்ட ஜி20 அறிக்கையில், அனைத்து உறுப்பு நாடுகளின் மத்திய வங்கிகளும், இந்த மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மானத்தை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. சர்வதேச பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கொள்கைகளை வகுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. –பி.டி.ஐ.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

மேலும்