Opportunity Cost - என்றால் என்ன?

By இராம.சீனுவாசன்

பொருளியலின் அடிப்படைக் கருத்துகளில் ஒன்று Opportunity Cost. நீங்கள் இந்த தகவலை படித்துகொண்டிருக்கும் நேரத்தை வேறு பல வேலைகளுக்கு செலவு செய்திருக்க முடியும்.

அவற்றை எல்லாம் விட்டுவிட்டுத்தான் இப்பொழுது இதை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள். உதாரணமாக, இந்த காலை நேரத்தில் நீங்கள் இரண்டு வேலைகள் செய்யவேண்டியுள்ளது செய்தித்தாள் வாசிப்பது, உடற்பயிற்சி செய்வது. இதில் செய்தித்தாள் வாசிப்பது முதன்மையானது என்றால் உடற்பயிற்சி செய்வது இரண்டாம் சிறந்த செயலாகும்.

நீங்கள் செய்தித்தாள் வாசிப்பது என்று தேர்ந்தெடுத்தால் உடற்பயிற்சி செய்யும் வாய்ப்பை இழக்கின்றீர்கள். எனவே, இந்த நேரத்தில் செய்தித்தாள் வாசிப்பதற்கான Opportunity Cost இரண்டாம் சிறந்த வாய்ப்பான உடற்பயிற்சி செய்யும் வாய்ப்பை இழந்ததேயாகும். ஒரு செயலின் opportunity cost, அச்செயலுக்காக எதை நீங்கள் விட்டுக்கொடுத்தீர்களோ அதுவேயாகும்.

Production Possibility Frontier

Opportunity Cost-ஐ அளவிட உருவாக்கப்பட்ட மற்றொரு கருத்து Production Possibility Frontier. ஒரு நாட்டில் உள்ள எல்லா வளங்களையும் பயன்படுத்தி அரிசி, கோதுமை என இரண்டு பொருட்களை உற்பத்தி செய்யமுடியும்.

எல்லா வளங்களையும் பயன்படுத்தினால் 100 மூட்டை அரிசி அல்லது 200 மூட்டை கோதுமையும் உற்பத்தி செய்யமுடியும். இதனை வரைபடத்தில் A, B ஆகிய புள்ளிகள் குறிப்பிடப்படுகின்றன. 100 மூட்டை அரிசி உற்பத்தி செய்யவேண்டும் என்றால் 200 மூட்டை கோதுமை உற்பத்தியை விட்டுக்கொடுக்க வேண்டும், அதாவது 1 மூட்டை அரிசியின் Opportunity Cost 2 மூட்டை கோதுமை.

உதாரணமாக c என்ற புள்ளியில் 50 மூட்டை அரிசியும், 100 மூட்டை கோதுமையும் உற்பத்தி செய்யப்படுகிறது. B புள்ளியிலிருந்து c புள்ளிக்குச் செல்லும்போது கோதுமை உற்பத்தி 100 மூட்டைகள் குறைந்து, அரிசி உற்பத்தி 50 மூட்டை உயர்ந்துள்ளது. எனவே, 1:2 என்பது Opportunity Cost. A லிருந்து c புள்ளிக்குச் செல்லும்போது அரிசி உற்பத்தி 50 மூட்டைகள் குறைந்து, கோதுமை உற்பத்தி 100 மூட்டை உயர்ந்துள்ளது.

எனவே, 1:2 என்பது Opportunity Cost. A, C, B ஆகியப் புள்ளிகளை இணைத்து Production Possibility Frontier பெறப்படும். இந்த நேர்க்கோடு Production Possibility Frontier முழுவதும் opportunity cost ஒரே அளவில் உள்ளது.

Opportunity cost இடத்துக்கு இடம் மாறும். ஒவ்வொரு புள்ளியிலும் Opportunity cost மாற்றும் போது Production Possibility Frontier வலைக்கோடாக இருக்கும். மேலிருந்து கீழே செல்லச்செல்ல கோதுமை உற்பத்திக்கான Opportunity cost அதிகரிக்கும் என்றால் Production Possibility Frontier வெளிப்புறமாகக் குவிந்திருக்கும்.

Production Possibility Frontier மேல் உள்ள எந்தப் புள்ளியிலும் அனைத்து வளங்களையும் முழுவதும் பயன்படுத்தி உற்பத்தி செய்யமுடியும். Production Possibility Frontierக்கு வலப்புறம் உள்ள புள்ளிகளில் உற்பத்தி செய்யமுடியாது, ஏனெனில் அதற்குத் தேவையான வளங்கள் இல்லை. Production Possibility Frontier-க்கு இடப்புறம் உள்ள புள்ளிகளில் உற்பத்தி செய்யமுடியும் ஆனால் எல்லா வளங்களையும் முழுவதும் பயன்படுத்த முடியாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்