வணிக நூலகம்: வலிமையான கருத்துகள் வளமான வாழ்க்கை!

By டாக்டர் பி.கிருஷ்ணகுமார்

நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதை விட, மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் தனி ஆர்வம் பலருக்கு உண்டு. தனிப்பட்ட வாழ்க்கையிலோ அல்லது பணியிலோ அல்லது தொழிலிலோ, கருத்துகளும் விமர்சனங்களுமே நமது செயலை சீர்படுத்தவும், அடுத்தகட்ட நிலைக்கு கொண்டு செல்வதற்கும் உதவி புரிகின்றன என்றால் அது மிகையல்ல.

பொதுவாக, மாற்றம் என்பது கடின மான ஒன்றே. ஆனால், மற்றவர்களிட மிருந்து வரும் கருத்துகளை பொறுப்புடன் ஏற்றுக்கொள்ளும்போது, அது அதிக வலிமையுடையதாக மாறு கின்றது. வளமான வாழ்க்கைக்கான மாற்றங்களுக்கு, நம்மீதான கருத்து களையும் விமர்சனங்களையும் எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பதற்கான வழிகாட்டுதல்களை சொல்கிறது “ஜோசப் ஆர் ஃபோக்மேன்” எழுதிய “தி பவர் ஆப் ஃபீட்பேக்” என்னும் இந்தப் புத்தகம்.

பொது நிலைப்பாடு!

பெரும்பாலான நிறுவனங்களில், கருத்துகளை அறிந்து கொள்வதற்கான செயல்முறை என்பது பொதுவான விஷயமே. துரதிருஷ்டவசமாக, இச் செயல் வழக்கமான நிறுவனப் பணிகளில் ஒன்றாக மட்டுமே பார்க்கப்படுகிறது என்கிறார் ஆசிரியர். ஆம், தங்களது செயல்திறனை மேம்படுத்திக்கொள்ள, தாங்கள் பெறும் கருத்துகளை எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பதை பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அறிந்திருப்பதில்லை. பெறப்படும் கருத்துகள் கோப்புகளி லேயே முடங்கிவிடுகின்றது. இதன் விளைவாக எவ்வித மாற்றமும் அவர்களிடம் ஏற்படுவதில்லை.

கருத்துகளின் தரம் என்பது ஒரு பிரச்சினையே அல்ல, அவற்றை வைத்து நாம் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம் என்பதை புத்தகத் தின் தொடக்கத்திலேயே வலியுறுத்தி யுள்ளார் ஆசிரியர். நம்மால் பெறப்படும் கருத்துகளை புரிந்துகொள்வது, சரியான அணுகுமுறையில் அவற்றை ஏற்றுக்கொள்வது, அவற்றின் மீதான செயல்பாடுகளுக்கான முன்னுரிமை கள் மற்றும் உண்மையான மேம்பாட் டிற்கான செயல்களைத் தொடங்குவது என இவற்றை சரியாகப் பயன்படுத் தும்போது, கருத்துகள் என்பவை சக்தி வாய்ந்த மற்றும் அர்த்தமுள்ள பரிசுகள் என்பதை நம்மால் உணரமுடியும்.

ஆரோக்கிய அணுகுமுறை!

நாம் ஒரு விஷயத்தை எப்படி அணுகுகிறோம் என்பதே, அதன் செயல் பாடு மற்றும் முடிவுகளை தீர்மானிக் கின்றது. நமக்கான கருத்துகளின் மீதான நமது கண்ணோட்டம், அதன் அடுத்தகட்ட செயல்பாடுகளில் பெரும்பங்கு வகிக்கின்றது என்கிறார் ஆசிரியர். அணுகுமுறை சரியான முறையில் இருக்கும்போது, அதன் செயல்பாடுகள் மற்றும் முடிவுகளும் நன்மையானதாகவே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பொதுவாக, கருத்துகள் நேர்மறையானதாகவோ அல்லது எதிரானதாகவோ இருக்கலாம். எதுவாயினும் அதை ஏற்று, நமது அடுத்தகட்ட பணிகளில் கவனம் செலுத்தவேண்டுமே தவிர, அதனை புறக்கணிப்பது அல்லது அதனால் எரிச்சலடைவது போன்றவற்றில் கவனம் செலுத்தக்கூடாது.

எதிர்மறை கருத்துகள் கூட, நம் முடைய தற்போதைய நிலைப்பாடு மற்றும் மேம்பாட்டிற்கான பரிந்துரை கள் போன்றவற்றில் நமக்கு உதவி செய்கின்றது என்பதை மறந்துவிடக் கூடாது. நம்மீதான கருத்துகள், எவ் விதமான விஷயங்களை வேண்டு மானாலும் தன்னகத்தே கொண்டிருக் கலாம். அவற்றை ஏற்றுக்கொள்ளும் நமது எதிர்வினையே, நமது செயல் பாட்டு சிந்தனையை சீராக்கவோ அல் லது சீரழிக்கவோ செய்கின்றது. மேலும் கருத்துகள் மீதான நமது அணுகு முறையானது, நமக்காக அவற்றை அளிக்கும் மற்றவர்களை ஊக்கமிழக்க செய்வதாக அமைந்துவிடக்கூடாது என் பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் ஆசிரியர். ஆக கருத்துகளைப் பெறுவதை முதன்மையான வாய்ப் பாக எண்ணி அவற்றை அணுகும் போது, அவை நமக்கு அதீத நன்மை யுடையதாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

பார்வைகள் பலவிதம்!

உண்மையான கருத்துகளால் மட் டுமே கொடுப்பவர் மற்றும் பெறுபவர் என இரு தரப்பினருக்கும் நன்மை களை ஏற்படுத்த முடியும். எப்படி நம்மீதான கருத்துகளை ஏற்றுக் கொள்ள சரியான அணுகுமுறை அவசியமோ, அதுபோலவே நம்மால் தெரிவிக்கப்படும் மற்றவர்கள் மீதான கருத்துகளுக்கும் ஒரு சில நெறிமுறை கள் உண்டு. இதில் நமது சொந்த செயல்திறன் மீதான நமது பார்வை முக்கிய பங்கு வகிக்கின்றது. எப்பொழு தெல்லாம் நாம் மற்றவர்களைப்பற்றி கருத்துகளை தெரிவிக்கிறோமோ, அப்போதெல்லாம் இந்தப் பார்வையின் மதிப்பீட்டினை நாம் கவனத்தில் வைக்கவேண்டும். அப்போதுதான் நேர்மையான மற்றும் சரியான கருத்துகள் நம்மிடமிருந்து வெளிவரும்.

உதாரணமாக, ஒரு நாயை ஒருவர் தன் காலால் உதைப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஏன் அவர் அவ்வாறு செய்தார் என்பதைப்பற்றி விளக்கம் அளிக்குமாறு நீங்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். பொதுவாகவே, உங்களது விளக்கம் அல்லது அந்த நிகழ்வைப்பற்றிய உங்களது பார்வை இந்த இரண்டு அணுகுமுறைகளில் ஒன்றாகவே இருக்கும். ஒன்று, அந்த நாயை நோக்கிய அவரின் அணுகுமுறை. அதாவது அவர் நாய்களை வெறுப்பவர் என்பதாக இருக்கும். இரண்டு, அந்த நிகழ்வை சுற்றியுள்ள நிலைமை அல்லது சூழலை விளக்குவதாக இருக்கும். அதாவது அந்த நாய் அவரை கடிப்பதற்கு முயற்சி செய்தது என்பதாக இருக்கும். இதில் ஒன்று அவரது நடத்தை சார்ந்தது, மற்றொன்று அந்த சூழ்நிலையைச் சார்ந்தது.

இதை மதிப்பிடுவதற்கான நான்கு வகையான உத்திகளை கொடுத்துள்ளார் ஆசிரியர். ஒன்று, இந்த நடத்தை அல்லது அணுகுமுறையானது தனித் துவமானதா மற்றும் குறிப்பிட்ட ஒரு வரின் மற்ற நடத்தைகளிலிருந்து மாறு பட்டதா என்பதை சார்ந்து நமது கருத்துகள் அமையலாம். இரண்டாவது, இம்மாதிரியான நடத்தைகள் தொடர்ந்து அவரிடமிருந்து வெளிப்படுகிறதா அல் லது அரிதாக நிகழக்கூடியதா என்பதை சார்ந்தும் கருத்துகள் இருக்கலாம். மூன்றாவது, மாறுபட்ட வெவ்வேறு சூழ்நிலைகளில் ஒருவரிடமிருந்து ஒரே மாதிரியான நடத்தைகள் வெளிபடுகின் றனவா அல்லது சூழலுக்கு ஏற்றவாறு அதில் ஏதேனும் மாறுபாடு உள்ளனவா என்பதை கவனிப்பதும் ஒருவித உத் தியே. நான்காவதாக, இம்மாதிரியான நடத்தைகள் மற்றொரு நபரின் நடத்தை களோடு ஒருமித்த பண்புகளைக் கொண் டுள்ளதா என்பதைக் கவனிப்பதும் ஒருவகை பார்வையே.

நம்பிக்கையூட்டுங்கள்!

ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறீர்கள். உங்கள் பணியாளர்களிடம் நிறுவனத்தைப் பற்றி ஒரு கருத்துக்கேட்பினை நடத்து கிறீர்கள். அவர்களிடமிருந்து கருத்து களைப் பெற்றுக்கொண்டு வெறுமனே இருந்துவிடாமல், அவர்களின் கருத்து களின் மீதான நடவடிக்கைகளை அவர் களுக்கு தெரிவித்து நம்பிக்கை யூட்டவேண்டியது அவசியமான செயல் என்கிறார் ஆசிரியர். முதலில் கருத்துகளை தெரிவித்த அனை வருக்கும் நிறுவனத்தின் சார்பில் நன்றி தெரிவியுங்கள். அடுத்ததாக, பணியாளர்களின் ஒவ்வொரு பிரச் சினைக்கும் பதிலளிக்க முடியாவிட் டாலும் அவர்களின் ஒட்டுமொத்த கருத்துகளுக்குமான ஒப்புகையினை தெரிவியுங்கள். அடுத்ததாக, மொத்த பிரச்சனைகளில் உள்ள ஒன்று அல்லது இரண்டு முக்கிய பிரச்சினைகளில் உடனடி கவனம் செலுத்தப்போவதை உறுதிசெய்யுங்கள். இறுதியாக, செயல்படுத்தப்போகும் திட்டங்களை கூறி பணியாளர்களின் எதிர்பார்ப்பிற்கு நம்பிக்கையூட்டுங்கள்.

மாற்றத்திற்கான பண்புகள்!

ஒரே இரவில் எவ்வித மாற்றங்களும் ஏற்பட்டு விடப்போவதில்லை. காலப் போக்கில் நம்மால் மேற்கொள்ளப்படும் நீடித்த முயற்சியின் விளைவாகவே வளமான வாழ்க்கைக்கான மாற்றங் களைப் பெறமுடியும். அதற்குத் தேவை யான சில பண்புகளைக் கொடுத்துள்ளார் ஆசிரியர். மாற்றத்திற்கான ஆர்வம் மற்றும் விருப்பம், கருத்துகள் மற்றும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு, நம்பிக்கை, அடுத் தவர்களின் மீதான அக்கறை மற்றும் இரக்கம், புதுமைகளை கையாளுதல், மற்றவர்களுக்கான உதவி, பொறுப்பு, தெளிவான இலக்குகள் மற்றும் முன்னுரிமைகள்.

மாற்றத்திற்காக நம்மை யாரும் கட்டாயப்படுத்த முடியாது, அது போலவே நமக்கான மாற்றத்தை வேறொருவரால் ஏற்படுத்தவும் முடியாது. நம் மாற்றம் நம் கையில் என்பதை உணர்ந்து, முயற்சியை தொடங்கி, தொடர்வோம்.

தொடர்புக்கு: p.krishnakumar@jsb.ac.in

உண்மையான கருத்துகளால் மட்டுமே கொடுப்பவர் மற்றும் பெறுபவர் என இரு தரப்பினருக்கும் நன்மைகளை ஏற்படுத்த முடியும். எப்படி நம்மீதான கருத்துகளை ஏற்றுக்கொள்ள சரியான அணுகுமுறை அவசியமோ, அதுபோலவே நம்மால் தெரிவிக்கப்படும் மற்றவர்கள் மீதான கருத்துகளுக்கும் ஒரு சில நெறிமுறைகள் உண்டு.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE